எசேக் 34:7-12

எசேக் 34:7-12 IRVTAM

ஆகையால், மேய்ப்பரே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். யெகோவாகிய ஆண்டவராக இருக்கிற நான் என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என்னுடைய ஆடுகள் சூறையாகி, என்னுடைய ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாகப் போனது; என்னுடைய மேய்ப்பர்கள் என்னுடைய ஆடுகளை விசாரியாமல்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள். ஆகையால் மேய்ப்பரே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பர்களுக்கு விரோதமாக வந்து, என்னுடைய ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர்கள் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என்னுடைய ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாக இல்லாதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் காப்பாற்றுவேன் என்று சொல்லு. யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என்னுடைய ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன். ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன்னுடைய ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன்னுடைய மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என்னுடைய ஆடுகளைத்தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரச்செய்து