எனவே, முன்பு சரீரத்தின்படி யூதரல்லாதவராக இருந்து, சரீரத்தில் கையினாலே விருத்தசேதனம்பண்ணப்பட்டவர்களால் விருத்தசேதனம்பண்ணப்பாடாதவர்கள் என்று சொல்லப்பட்ட நீங்கள், அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய குடியுரிமைக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியர்களாகவும், நம்பிக்கை இல்லாதவர்களும், இந்த உலகத்தில் தேவனில்லாதவர்களுமாக இருந்தீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். முன்னே தூரத்தில் இருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவிற்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அருகில் வந்தீர்கள். எப்படியென்றால், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருகூட்டத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய சரீரத்தினாலே ஒழித்து, இருகூட்டத்தாரையும் அவருக்குள்ளாக ஒரே புதிய மனிதனாக உருவாக்கி, இப்படிச் சமாதானம்பண்ணி
வாசிக்கவும் எபே 2
கேளுங்கள் எபே 2
பகிர்
அனைத்து மொழியாக்கங்களையும் ஒப்பிடவும்: எபே 2:11-15
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்