உங்களில் உள்ள மூப்பர்களுக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்குள்ளவனாக இருக்கிற நான் புத்திசொல்லுகிறது என்னவென்றால்: உங்களிடம் உள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாக இல்லை, மனப்பூர்வமாகவும், அவலட்சணமான ஆதாயத்திற்காகவும் இல்லை, உற்சாக மனதோடும், சுதந்திரத்தை பெருமையோடு ஆளுகிறவர்களாக இல்லை, மந்தைக்கு முன்மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள். அப்படி செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமை குறையாத கிரீடத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். அப்படியே, இளைஞர்களே, மூப்பர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; “பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” ஆகவே, குறித்தக் காலத்திலே தேவன் உங்களை உயர்த்துவதற்காக, அவருடைய பலத்த கரங்களுக்குள் அடங்கி இருங்கள்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் 1 பேது 5
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 1 பேது 5:1-6
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்