1
சங்கீதம் 119:105
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
ஒப்பீடு
சங்கீதம் 119:105 ஆராயுங்கள்
2
சங்கீதம் 119:11
நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.
சங்கீதம் 119:11 ஆராயுங்கள்
3
சங்கீதம் 119:9
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே.
சங்கீதம் 119:9 ஆராயுங்கள்
4
சங்கீதம் 119:2
அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
சங்கீதம் 119:2 ஆராயுங்கள்
5
சங்கீதம் 119:114
என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
சங்கீதம் 119:114 ஆராயுங்கள்
6
சங்கீதம் 119:34
எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.
சங்கீதம் 119:34 ஆராயுங்கள்
7
சங்கீதம் 119:36
என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்.
சங்கீதம் 119:36 ஆராயுங்கள்
8
சங்கீதம் 119:71
நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
சங்கீதம் 119:71 ஆராயுங்கள்
9
சங்கீதம் 119:50
அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது.
சங்கீதம் 119:50 ஆராயுங்கள்
10
சங்கீதம் 119:35
உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்.
சங்கீதம் 119:35 ஆராயுங்கள்
11
சங்கீதம் 119:33
கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.
சங்கீதம் 119:33 ஆராயுங்கள்
12
சங்கீதம் 119:28
சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.
சங்கீதம் 119:28 ஆராயுங்கள்
13
சங்கீதம் 119:97
உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.
சங்கீதம் 119:97 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்