1
பிலிப்பியர் 4:6
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் எல்லாவற்றிலும் நன்றி செலுத்துவதோடு, உங்கள் விண்ணப்பங்களை மன்றாடுதலின் மூலமும், வேண்டுதலின் மூலமும் இறைவனிடம் அர்ப்பணியுங்கள்.
ஒப்பீடு
பிலிப்பியர் 4:6 ஆராயுங்கள்
2
பிலிப்பியர் 4:7
அப்போது, விளங்கிக்கொள்ளும் ஆற்றல் அனைத்துக்கும் அப்பாற்பட்டதான இறைவனுடைய சமாதானம், கிறிஸ்து இயேசுவோடு இணைக்கப்பட்டவர்களான உங்கள் இதயங்களையும் மனங்களையும் பாதுகாக்கும்.
பிலிப்பியர் 4:7 ஆராயுங்கள்
3
பிலிப்பியர் 4:8
இறுதியாக பிரியமானவர்களே, உண்மையானவை எவையோ, மதிப்பானவை எவையோ, சரியானவை எவையோ, தூய்மையானவை எவையோ, அன்பானவை எவையோ, பாராட்டுதலுக்குத் தகுந்தவை எவையோ, அத்துடன் மேன்மையும் புகழ்ச்சியுமானவை எவைகளோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்.
பிலிப்பியர் 4:8 ஆராயுங்கள்
4
பிலிப்பியர் 4:13
என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவின் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கின்றது.
பிலிப்பியர் 4:13 ஆராயுங்கள்
5
பிலிப்பியர் 4:4
எப்போதும் கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருங்கள். மீண்டும் உங்களுக்குச் சொல்கின்றேன்: மகிழ்ச்சியாய் இருங்கள்!
பிலிப்பியர் 4:4 ஆராயுங்கள்
6
பிலிப்பியர் 4:19
என் இறைவன், தமது மகிமை நிறைந்த செல்வத்தின்படியே உங்கள் எல்லாக் குறைகளையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாக நிறைவாக்குவார்.
பிலிப்பியர் 4:19 ஆராயுங்கள்
7
பிலிப்பியர் 4:9
நீங்கள் எவற்றை எல்லாம் என்னிடமிருந்து கற்றுக் கொண்டீர்களோ, பெற்றுக்கொண்டீர்களோ, கேட்டறிந்தீர்களோ அல்லது என் நடத்தையில் கண்டீர்களோ அவைகளையே கைக்கொள்ளுங்கள். அப்போது சமாதானத்தின் இறைவன் உங்களோடு இருப்பார்.
பிலிப்பியர் 4:9 ஆராயுங்கள்
8
பிலிப்பியர் 4:5
உங்கள் கனிவான குணம் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் விரைவில் வருகின்றார்.
பிலிப்பியர் 4:5 ஆராயுங்கள்
9
பிலிப்பியர் 4:12
ஏழ்மையுடன் வாழவும் எனக்குத் தெரியும், நிறைவுடன் வாழவும் எனக்குத் தெரியும். வயிறார உணவு உண்டிருந்தாலும், பசியோடு பட்டினியாயிருந்தாலும், வாழ்வில் நிறைவோ குறைவோ எதுவாயிருந்தாலும், எப்போதும் எல்லாச் சூழ்நிலைகளிலும் மனத்திருப்தியுடன் வாழும் இரகசியத்தையும் கற்றுக் கொண்டுள்ளேன்.
பிலிப்பியர் 4:12 ஆராயுங்கள்
10
பிலிப்பியர் 4:11
எனக்கு ஏதோ தேவை இருப்பதால் இதைக் கூறவில்லை. ஏனெனில், நான் எந்தச் சூழ்நிலையிலும் மனநிறைவுடன் இருக்கக் கற்றுக் கொண்டேன்.
பிலிப்பியர் 4:11 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்