1
மாற்கு 16:15
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
அவர் அவர்களிடம், “நீங்கள் உலகம் எங்கும் போய் எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள்.
ஒப்பீடு
மாற்கு 16:15 ஆராயுங்கள்
2
மாற்கு 16:17-18
விசுவாசிக்கின்றவர்கள் மத்தியில் காணப்படும் அடையாளங்களாவன: எனது பெயரில் அவர்கள் பேய்களைத் துரத்துவார்கள்; புதிய மொழிகளில் பேசுவார்கள்; பாம்புகளைக்கூட தங்கள் கைகளினால் பிடித்துத் தூக்குவார்கள்; மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குக் கேடு விளைவிக்காது; நோயாளிகளின் மேல் தங்கள் கைகளை வைப்பார்கள், அப்போது அவர்கள் குணமடைவார்கள்” என்றார்.
மாற்கு 16:17-18 ஆராயுங்கள்
3
மாற்கு 16:16
யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறார்களோ, அவர்கள் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள். யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசிக்கவில்லையோ, அவர்கள் குற்றவாளியாய்த் தீர்க்கப்படுவார்கள்.
மாற்கு 16:16 ஆராயுங்கள்
4
மாற்கு 16:20
அதன்பின்பு அவருடைய சீடர்கள் புறப்பட்டுப் போய் எல்லா இடங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். கர்த்தர் அவர்களுடன் செயலாற்றி தமது வார்த்தையை அற்புத அடையாளங்களினால் உறுதிப்படுத்தினார்.
மாற்கு 16:20 ஆராயுங்கள்
5
மாற்கு 16:6
அப்போது அவன் அவர்களிடம், “பயப்பட வேண்டாம், சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவை நீங்கள் தேடுகிறீர்கள். அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் இங்கு இல்லை. அவரைக் கிடத்திய இடத்தைப் பாருங்கள்.
மாற்கு 16:6 ஆராயுங்கள்
6
மாற்கு 16:4-5
ஆனால் அவர்கள் வந்து பார்த்த போதோ, மிகவும் பெரிதான அந்தக் கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் கல்லறைக்குள்ளே போனபோது, வெள்ளை உடை உடுத்திய ஒரு இளைஞன் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதை அவர்கள் கண்டு பயந்தார்கள்.
மாற்கு 16:4-5 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்