ஏனெனில், இறைவனுடைய வார்த்தை உயிருள்ளதும், செயலாற்றல் உடையதுமாய் இருக்கின்றது. அது இரு பக்கமும் கூர்மையுள்ள வாளைவிடக் கூர்மையானது. அது ஆத்துமாவையும், ஆவியையும், எலும்பின் மூட்டுக்களையும், எலும்பின் உள் இழையங்களையும் பிரிக்கத்தக்கதாய் துளைத்துச் செல்கிறது; அது இருதயத்தின் சிந்தனைகளையும், உள்நோக்கங்களையும் நிதானித்துத் தீர்ப்பிடுகிறது.