1
கலாத்தியர் 6:9
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
நன்மை செய்வதை விட்டுவிடாமல் அதில் சோர்வடையாதவர்களாய் இருந்தால், ஏற்ற காலத்தில் அறுவடை செய்வோம்.
ஒப்பீடு
கலாத்தியர் 6:9 ஆராயுங்கள்
2
கலாத்தியர் 6:10
ஆகவே நமக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எல்லா மக்களுக்கும், விசேடமாக விசுவாச குடும்பத்தினருக்கு நன்மையை செய்வோமாக.
கலாத்தியர் 6:10 ஆராயுங்கள்
3
கலாத்தியர் 6:2
ஒருவர் சுமையை இன்னொருவர் சுமந்து, கிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்றுங்கள்.
கலாத்தியர் 6:2 ஆராயுங்கள்
4
கலாத்தியர் 6:7
ஏமாற வேண்டாம்; இறைவனை ஏளனத்துக்கு உள்ளாக்க முடியாது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதனையே அறுவடை செய்வான்.
கலாத்தியர் 6:7 ஆராயுங்கள்
5
கலாத்தியர் 6:8
தன்னுடைய பாவ மனித இயல்புக்கு இசைவாக விதைக்கிற ஒருவன், பாவ மனித இயல்பிலிருந்து அழிவையே அறுவடை செய்வான். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் விருப்பத்தின்படி விதைக்கிற ஒருவனோ பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நித்திய வாழ்வை அறுவடை செய்வான்.
கலாத்தியர் 6:8 ஆராயுங்கள்
6
கலாத்தியர் 6:1
பிரியமானவர்களே, எவராவது பாவச் செயல்களில் ஒன்றில் ஈடுபட்டு அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் அவரை சாந்தமுள்ள மனதோடு மீண்டும் நல்வழிக்குக் கொண்டுவர வேண்டும். நீங்களும் சோதனைக்கு உள்ளாகாதபடி உங்களைக் குறித்து கவனமாக இருங்கள்.
கலாத்தியர் 6:1 ஆராயுங்கள்
7
கலாத்தியர் 6:3-5
உண்மையில் வெற்று மனிதனாக இருக்கும் ஒருவன் தன்னை மேன்மையானவனாக எண்ணிக்கொண்டால் அவன் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறான். ஒவ்வொருவனும் தான் செய்வதை தானே பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அப்போது மற்றவர்களுடன் தன்னை ஒப்பிடாமல், தன்னுடைய செயலின் தன்மையிலேயே பெருமையடையலாம். ஒவ்வொருவனும் தன்னுடைய சுமைக்குத் தானே பொறுப்பாளியாவான்.
கலாத்தியர் 6:3-5 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்