1
கொலோசேயர் 3:13
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
ஒருவரோடு ஒருவர் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள். யாராவது ஒருவருக்கு எதிராக இன்னொருவருக்கு ஏதாவது ஒரு மனக்குறை இருக்குமானால் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்; கர்த்தர் உங்களை மன்னித்தது போல, நீங்களும் மன்னியுங்கள்.
ஒப்பீடு
கொலோசேயர் 3:13 ஆராயுங்கள்
2
கொலோசேயர் 3:2
உலகத்துக்குரிய காரியங்களில் அன்றி, பரலோகத்துக்குரிய காரியங்களில் உங்கள் மனதை ஒருமுகப்படுத்துங்கள்.
கொலோசேயர் 3:2 ஆராயுங்கள்
3
கொலோசேயர் 3:23
நீங்கள் எதைச் செய்தாலும் அதை மனிதர்களுக்காகச் செய்யாமல் கர்த்தருக்காகவே செய்கின்றீர்கள் என முழு மனதோடு செய்யுங்கள்.
கொலோசேயர் 3:23 ஆராயுங்கள்
4
கொலோசேயர் 3:12
ஆகவே இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மக்களும், பரிசுத்தமுள்ளவர்களும், அவரது அன்புக்குரியவர்களுமாய் இருக்கின்ற நீங்கள் இரக்கம், தயவு, தாழ்மை, சாந்தம், பொறுமை ஆகிய குணங்களை அணிந்துகொள்ளுங்கள்.
கொலோசேயர் 3:12 ஆராயுங்கள்
5
கொலோசேயர் 3:16-17
கிறிஸ்துவின் வார்த்தை உங்களுக்குள் நிறைவாய் குடியிருக்கட்டும். நீங்கள் சகல ஞானத்தோடு சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் போதித்து, அறிவுரை கூறி உங்கள் இருதயங்களில் இறைவனை நன்றியுடன் பாடுங்கள். நீங்கள் எதைப் பேசினாலும் எதைச் செய்தாலும் ஆண்டவர் இயேசுவின் பெயரிலேயே எல்லாவற்றையும் செய்து, அவர் ஊடாக பிதாவாகிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
கொலோசேயர் 3:16-17 ஆராயுங்கள்
6
கொலோசேயர் 3:14
இந்த நற்குணங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக, அன்பை அணிந்துகொள்ளுங்கள். இதுவே அனைத்தையும் ஒரு பூரண ஒருமைப்பாட்டில் இணைக்கிறது.
கொலோசேயர் 3:14 ஆராயுங்கள்
7
கொலோசேயர் 3:1
நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உயிருடன் எழுப்பப்பட்டிருக்கின்றபடியால், பரலோக காரியங்களையே விரும்பித் தேடுங்கள். அங்கே கிறிஸ்து, இறைவனுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.
கொலோசேயர் 3:1 ஆராயுங்கள்
8
கொலோசேயர் 3:15
கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளுகை செய்யட்டும். ஏனெனில் இந்தச் சமாதானத்துக்காகவே நீங்கள் ஒரே உடலின் அங்கங்களாய் இருக்க அழைக்கப்பட்டீர்கள். எனவே நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள்.
கொலோசேயர் 3:15 ஆராயுங்கள்
9
கொலோசேயர் 3:5
ஆகவே, உலக இயல்புக்குச் சொந்தமான பாலியல் ஒழுக்கக்கேடு, அசுத்தமான நடத்தை, காம வேட்கைகள், தீய ஆசைகள், விக்கிரக வழிபாடாகிய பேராசை ஆகிய அனைத்தையும் சாகடித்து விடுங்கள்.
கொலோசேயர் 3:5 ஆராயுங்கள்
10
கொலோசேயர் 3:3
ஏனெனில் நீங்கள் இறந்துவிட்டீர்கள், இப்பொழுதோ உங்கள் வாழ்க்கை கிறிஸ்துவுடன் இறைவனில் மறைந்திருக்கிறது.
கொலோசேயர் 3:3 ஆராயுங்கள்
11
கொலோசேயர் 3:8
ஆனால் இப்பொழுதோ கடும் கோபம், சினம், கேடு செய்யும் எண்ணம், அவதூறு பேசுதல் ஆகிய நடத்தைகளை உங்கள் வாழ்க்கையிலிருந்து அகற்றி விடுங்கள். ஆபாசப் பேச்சு உங்கள் உதடுகளிலிருந்து வெளிவரக் கூடாது.
கொலோசேயர் 3:8 ஆராயுங்கள்
12
கொலோசேயர் 3:9-10
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் பழைய மனித சுபாவத்தையும், அதன் செயல்களையும் உங்களிடமிருந்து களைந்துவிட்டு, புதிதாக்கப்பட்ட மனிதனின் சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள். அந்த சுபாவமானது படைத்தவருடைய சாயலில், அவரைப்பற்றிய அறிவினால் புதிதாக்கப்படுகிறது.
கொலோசேயர் 3:9-10 ஆராயுங்கள்
13
கொலோசேயர் 3:19
கணவர்களே, உங்கள் மனைவியிடம் அன்பாய் இருங்கள். அவர்களுடன் கடுமையாய் நடந்துகொள்ளாதிருங்கள்.
கொலோசேயர் 3:19 ஆராயுங்கள்
14
கொலோசேயர் 3:20
பிள்ளைகளே! உங்கள் பெற்றோருக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஏனெனில், இது கர்த்தரைப் பிரியப்படுத்துகின்றது.
கொலோசேயர் 3:20 ஆராயுங்கள்
15
கொலோசேயர் 3:18
மனைவியரே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். இதுவே கர்த்தரை அறிந்தவர்களுக்குப் பொருத்தமானது.
கொலோசேயர் 3:18 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்