“ ‘இந்த மக்களிடத்தில் போய்,
“நீங்கள் எப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டீர்கள்.
நீங்கள் எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒருபோதும் அறிந்துகொள்ள மாட்டீர்கள் என்று சொல்.”
ஏனெனில் இந்த மக்களுடைய இருதயம் உணர்வற்றுப் போயிற்று;
அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கின்றார்கள்,
தங்களுடைய கண்களையும் மூடியிருக்கின்றார்கள்.
இல்லாவிட்டால், அவர்கள் தங்கள் கண்களால் பார்த்திருப்பார்கள்.
காதுகளால் கேட்டிருப்பார்கள்.
இருதயத்தால் அறிந்து உணர்ந்திருப்பார்கள்.
அவர்கள் என்னிடமாய் திரும்பியிருப்பார்கள்.
நான் அவர்களைக் குணமாக்கியிருப்பேன்.’