சிறைக்காவலன் எழுந்திருந்து, சிறைச்சாலைக் கதவுகள் திறந்து கிடந்ததைக் கண்டபோது, அவன் தன் வாளை உருவி, தற்கொலை செய்ய முயன்றான். ஏனெனில், சிறைக் கைதிகள் தப்பியோடிவிட்டார்கள் என்று அவன் நினைத்தான். ஆனால் பவுலோ அவனை நோக்கிச் சத்தமிட்டு, “நீ உனக்குத் தீங்கு செய்யாதே! நாங்கள் எல்லோரும் இங்கேதான் இருக்கின்றோம்” என்றான்.