வெளிப்புறமாக நாம் உருவழிந்து போனாலும், எமது உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதுப்பிக்கப்படுகின்றபடியால் நாங்கள் மனம் தளர்ந்து போவதில்லை. ஏனெனில் நமக்குத் தற்காலிகமாய் ஏற்படுகின்ற பாரமற்ற சிறிய துன்பங்களானது, அவற்றோடு எவ்விதத்திலும் ஒப்பிட முடியாத பாரம் நிறைந்த நித்திய மகிமையை விளைவிக்கின்றன.