1
1 கொரிந்தியர் 2:9
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
ஆனால் எழுதியிருக்கின்றபடி: “தம்மை நேசிக்கிறவர்களுக்கு இறைவன் ஆயத்தமாக்கி வைத்திருப்பவைகளை எந்தக் கண்ணும் காணவுமில்லை, எந்தக் காதும் கேட்கவுமில்லை, எந்த ஒரு மனமும் கற்பனை செய்யவுமில்லை.”
ஒப்பீடு
1 கொரிந்தியர் 2:9 ஆராயுங்கள்
2
1 கொரிந்தியர் 2:14
பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிராத மனிதன், இறைவனின் ஆவியானவரிடமிருந்து வரும் காரியங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அவை அவனுக்கு முட்டாள்தனமாகத் தோன்றும். அவற்றைப் புரிந்துகொள்ளவும் முடியாது. ஏனெனில், அவை ஆவிக்குரிய ரீதியாகவே நிதானித்து அறியப்படுகின்றன.
1 கொரிந்தியர் 2:14 ஆராயுங்கள்
3
1 கொரிந்தியர் 2:10
இறைவன் தமது பரிசுத்த ஆவியானவரின் மூலமாய் இவைகளை நமக்கு வெளிப்படுத்தினார். பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் ஆராய்கிறார்; இறைவனுக்குரிய ஆழங்களையும் ஆராய்கிறார்.
1 கொரிந்தியர் 2:10 ஆராயுங்கள்
4
1 கொரிந்தியர் 2:12
நாம் உலகத்தின் ஆவியைப் பெற்றுக்கொள்ளாமல் இறைவன் நமக்கு உரித்தாகக் கொடுத்தவற்றை புரிந்துகொள்ளும்படி, இறைவனிடத்திலிருந்து வந்த ஆவியானவரைப் பெற்றிருக்கிறோம்.
1 கொரிந்தியர் 2:12 ஆராயுங்கள்
5
1 கொரிந்தியர் 2:4-5
என் செய்தியும் என் பிரசங்கமும், ஞானமும் நாவன்மை உள்ள வார்த்தைகளாகவும் இருக்காமல் ஆவியானவரின் வல்லமையை வெளிப்படுத்துவனவாக இருந்தன. ஏனென்றால் உங்கள் விசுவாசம் மனித ஞானத்தில் தங்கியிருக்காமல் இறைவனின் வல்லமையிலே தங்கியிருக்கும்படியாகவே அப்படிச் செய்தேன்.
1 கொரிந்தியர் 2:4-5 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்