1
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:7
பரிசுத்த பைபிள்
“தொடர்ந்து கேளுங்கள், தேவன் கொடுப்பார். தொடர்ந்து தேடுங்கள், கிடைக்கும். தொடர்ந்து தட்டுங்கள், திறக்கப்படும்.
ஒப்பீடு
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:7 ஆராயுங்கள்
2
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:8
ஆம், ஒருவன் தொடர்ந்து கேட்டால், அவன் அதைப் பெறுவான். ஒருவன் தொடர்ந்து தேடினால், அவன் கண்டடைவான். ஒருவன் தொடர்ந்து தட்டினால், கதவு அவனுக்காகத் திறக்கப்படும்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:8 ஆராயுங்கள்
3
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:24
“என் போதனைகளைக் கேட்டு அதன்படி நடக்கிற எவனும் புத்தியுள்ளவன் ஆவான். புத்தியுள்ள மனிதன் தன் வீட்டைப் பாறையின் மேல் கட்டினான்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:24 ஆராயுங்கள்
4
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:12
“மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே மற்றவர்களுக்கு நீங்கள் செய்யுங்கள். இதுவே மோசேயின் கட்டளை மற்றும் தீர்க்கதரிசிகளின் போதனைகளின் பொருளுமாகும்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:12 ஆராயுங்கள்
5
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:14
ஆனால், மெய்யான வாழ்விற்கான வாசல் மிகவும் குறுகியது. மெய்யான வாழ்விற்குக் கொண்டு செல்லும் பாதையோ கடினமானது. மிகச் சிலரே அப்பாதையைக் கண்டடைகிறார்கள்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:14 ஆராயுங்கள்
6
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:13
“பரலோகத்திற்குச் செல்லும் குறுகிய வாசலுக்குள் நுழையுங்கள். நரகத்திற்குச் செல்லும் பாதையோ எளிமையானது. ஏனெனில் நரகத்தின் வாசல் அகன்றது. பலர் அதில் நுழைகிறார்கள்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:13 ஆராயுங்கள்
7
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:11
நீங்கள் தேவனைப்போல அல்லாமல், பொல்லாதவர்களாய் இருக்கும் உங்களுக்கே குழந்தைகளுக்கு நற்பொருட்களைத் தரத்தெரியும்போது, பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றைக் கொடுப்பார் அன்றோ?
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:11 ஆராயுங்கள்
8
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:1-2
“மற்றவர்களை நீங்கள் நியாயம் தீர்க்காதீர்கள். அப்பொழுது தேவன் உங்களை நியாயம் தீர்க்கமாட்டார். நீங்கள் மற்றவர்களை எப்படி நியாயம் தீர்க்கிறீர்களோ அவ்வாறே தேவன் உங்களை நியாயம் தீர்ப்பார். மற்றவர்களுக்கு நீங்கள் வழங்கும் மன்னிப்பு உங்களுக்கும் வழங்கப்படும்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:1-2 ஆராயுங்கள்
9
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:26
“என் போதனைகளைக் கேட்டுவிட்டு அதன்படி நடக்காதவர்கள் புத்தியற்ற மனிதனைப் போன்றவர்கள். புத்தியற்ற மனிதன் மணல் மீது தன் வீட்டைக் கட்டினான்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:26 ஆராயுங்கள்
10
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:3-4
“உங்கள் கண்ணில் இருக்கும் மரத்துண்டினைக் கவனிக்காது, உங்கள் சகோதரனின் கண்ணில் உள்ள தூசியைக் காண்கிறீர்கள். அது ஏன்? ‘உன் கண்ணிலிருந்து தூசியை நான் அகற்றிவிடுகிறேன்’, என்று ஏன் உங்கள் சகோதரனிடம் சொல்கிறீர்கள்? உங்களை முதலில் கவனியுங்கள். உங்கள் கண்ணில் இன்னமும் பெரிய மரத்துண்டு உள்ளது.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:3-4 ஆராயுங்கள்
11
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:15-16
“போலி தீர்க்கதரிசிகளிடம் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களிடம் வரும் போலி தீர்க்கதரிசிகள் செம்மறியாட்டைப் போல இனிமையானவர்களாய்க் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள், ஓநாய்களைப்போல அபாயமானவர்கள். அவர்களது செயல்களிலிருந்து நீங்கள் அவர்களைக் கண்டு கொள்ளலாம். எவ்வாறு திராட்சைப்பழம் முட்புதரிலும், அத்திப்பழம் முட்செடிகளிலும் காய்ப்பதில்லையோ அவ்வாறே நல்லவை தீய மனிதர்களிடமிருந்து வருவதில்லை.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:15-16 ஆராயுங்கள்
12
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:17
அதுபோலவே, ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனிகளையே கொடுக்கும். தீய மரங்கள் தீய பழங்களையே கொடுக்கும்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:17 ஆராயுங்கள்
13
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:18
அது போலவே, நல்ல மரம் தீய கனியைத் தரமுடியாது. கெட்ட மரம் நல்ல கனியைத் தரமுடியாது.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:18 ஆராயுங்கள்
14
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:19
நல்ல கனிகளைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:19 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்