1
யோவான் எழுதிய சுவிசேஷம் 4:24
பரிசுத்த பைபிள்
தேவன் ஆவியாயிருக்கிறார். ஆகையால் தேவனை வழிபடுகிற மக்கள் ஆவியோடும் உண்மையோடும் தேவனை வழிபடுதல் வேண்டும்” என்றார் இயேசு.
ஒப்பீடு
யோவான் எழுதிய சுவிசேஷம் 4:24 ஆராயுங்கள்
2
யோவான் எழுதிய சுவிசேஷம் 4:23
உண்மையாக வழிபடுகிறவர்கள் (தேவனை) ஆவியோடும் உண்மையோடும் வழிபடுகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. அது இப்பொழுதே வந்திருக்கிறது. பிதாவும் தம்மை வழிபடுகிறவர்கள் இத்தகைய மக்களாக இருக்க விரும்புகிறார்.
யோவான் எழுதிய சுவிசேஷம் 4:23 ஆராயுங்கள்
3
யோவான் எழுதிய சுவிசேஷம் 4:14
ஆனால் நான் கொடுக்கிற தண்ணீரைக் குடிப்பவர்களுக்கோ மறுபடியும் தாகம் எடுப்பதில்லை. என்னால் கொடுக்கப்படுகிற தண்ணீர், அதைக் குடிப்பவனுக்குள் நீரூற்றாகப் பெருக்கெடுக்கும். அது அவனுக்கு எக்காலத்துக்கும் உரிய வாழ்க்கையைத் தரும்” என்று இயேசு பதிலுரைத்தார்.
யோவான் எழுதிய சுவிசேஷம் 4:14 ஆராயுங்கள்
4
யோவான் எழுதிய சுவிசேஷம் 4:10
“தேவன் கொடுப்பவற்றைப்பற்றி நீ அறியவில்லை. குடிக்கத் தண்ணீர் கேட்கிற நான் யாரென்று உனக்குத் தெரியாது. இவற்றைப்பற்றி நீ அறிந்தால் நீ என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய். ஜீவத் தண்ணீரை நான் உனக்குக் கொடுத்திருப்பேன்” என்றார் இயேசு.
யோவான் எழுதிய சுவிசேஷம் 4:10 ஆராயுங்கள்
5
யோவான் எழுதிய சுவிசேஷம் 4:34
“எனது உணவு என்னை அனுப்பிய தேவன் செய்யச் சொன்னதைச் செய்வதுதான்; எனக்குக் கட்டளையிட்டபடி செய்து முடிப்பதுதான் எனது உணவாக இருக்கிறது.
யோவான் எழுதிய சுவிசேஷம் 4:34 ஆராயுங்கள்
6
யோவான் எழுதிய சுவிசேஷம் 4:11
“ஐயா, ஜீவத் தண்ணீரை நீங்கள் எங்கிருந்து பெறுவீர்கள்? இந்தக் கிணறோ ஆழமாக இருக்கிறது. இதிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கும் உங்களிடம் எதுவும் இல்லையே!
யோவான் எழுதிய சுவிசேஷம் 4:11 ஆராயுங்கள்
7
யோவான் எழுதிய சுவிசேஷம் 4:25-26
“கிறிஸ்து என்று அழைக்கப்படுகிற மேசியா வந்துகொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் வந்ததும் எங்களுக்கு அனைத்தையும் விளக்குவார்” என்றாள் அப்பெண். பிறகு இயேசு, “இப்பொழுது அவர்தான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறார். நான்தான் மேசியா” என்றார்.
யோவான் எழுதிய சுவிசேஷம் 4:25-26 ஆராயுங்கள்
8
யோவான் எழுதிய சுவிசேஷம் 4:29
அங்கே அவள் மக்களிடம், “நான் செய்தவற்றையெல்லாம் ஒருவர் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். ஒரு வேளை அவர் கிறிஸ்துவாக இருக்கலாம்” என்றாள்.
யோவான் எழுதிய சுவிசேஷம் 4:29 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்