1
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:10
பரிசுத்த பைபிள்
திருடன் திருடுவதற்காகவே வருகிறான். அவன் ஆடுகளைக் கொல்லவும் அழிக்கவுமே செய்வான். ஆனால் நானோ ஜீவனைக் கொடுக்க வந்துள்ளேன். அந்த ஜீவன் பூரணமும், நன்மையுமானது.
ஒப்பீடு
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:10 ஆராயுங்கள்
2
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:11
“நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தனது ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுப்பான்.
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:11 ஆராயுங்கள்
3
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:27
எனது ஆடுகள் எனது குரலைக் கேட்கும். நான் அவற்றை அறிவேன். அவை என்னைப் பின் தொடரும்.
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:27 ஆராயுங்கள்
4
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:28
நான் என் ஆடுகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் இறந்துபோவதில்லை. அவைகளை என் கையிலிருந்து எவரும் பறித்துக்கொள்ளமுடியாது.
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:28 ஆராயுங்கள்
5
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:9
நானே வாசல். என் மூலமாக நுழைகிறவனே மீட்கப்படுவான். அவன் உள்ளேயும் வெளியேயும் போய் மேய்ச்சலைக் கண்டடைவான்.
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:9 ஆராயுங்கள்
6
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:14-15
“ஆடுகளைப்பற்றி (மக்களைப்பற்றி) அக்கறை கொண்ட நல்ல மேய்ப்பன் நான். என் பிதா என்னை அறிந்திருப்பது போலவே நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவை அறிந்திருப்பது போலவே என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. நான் என் ஆடுகளுக்காக என் ஜீவனைக் கொடுக்கிறேன்.
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:14-15 ஆராயுங்கள்
7
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:29-30
என் பிதா எனக்கு ஆடுகளைத் தந்தார். அவர் எல்லோரையும்விடப் பெரியவர். எவரும் ஆடுகளை என் பிதாவின் கைகளில் இருந்து திருடிக்கொள்ளமுடியாது. நானும் பிதாவும் ஒருவர்தான்” என்றார், இயேசு.
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:29-30 ஆராயுங்கள்
8
9
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:18
என்னிடமிருந்து என் ஜீவனை எவரும் பறிக்க முடியாது. நானே என் ஜீவனைத் தாராளமாகக் கொடுக்கிறேன். அதற்கான உரிமை எனக்குண்டு. அதுபோல் அதனைத் திரும்பப் பெறுகிற உரிமையும் எனக்குண்டு. இதைத்தான் பிதா எனக்குக் கட்டளையிட்டார்” என்றார்.
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:18 ஆராயுங்கள்
10
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:7
எனவே இயேசு மேலும் சொன்னார், “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆடுகளுக்கு நானே வாசலாக இருக்கிறேன்.
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:7 ஆராயுங்கள்
11
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:12
கூலிக்காக ஆடுகளைக் கவனிக்கிறவன் மேய்ப்பனைவிட வித்தியாசமானவன். கூலிக்காரனுக்கு ஆடுகள் சொந்தமானவை அல்ல. ஆகையால் ஓநாய் வருவதைக் கண்டால் கூலிக்காரன் ஆடுகளை விட்டு, விட்டு ஓடிப் போவான். பிறகு ஓநாய்கள் ஆடுகளை கிழித்து கொன்று சிதறடிக்கும்.
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:12 ஆராயுங்கள்
12
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:1
“உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், ஒருவன் ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல் வழியாகவே நுழையவேண்டும். வேறு வழியாக நுழைந்தால், அவன் ஒரு திருடன். அவன் ஆடுகளைத் திருடவே முயற்சி செய்வான்.
யோவான் எழுதிய சுவிசேஷம் 10:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்