1
நீதிமொழி 4:23
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
எல்லாவற்றிற்கும் மேலாக, உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து நீ செய்யும் எல்லாமே உனது வாழ்வின் ஊற்றாகப் புறப்பட்டு வரும்.
ஒப்பீடு
நீதிமொழி 4:23 ஆராயுங்கள்
2
நீதிமொழி 4:26
உன் பாதங்களுக்கு ஒழுங்கான பாதைகளை அமைத்துக்கொள்; அப்பொழுது உன் வழிகளெல்லாம் உறுதியாயிருக்கும்.
நீதிமொழி 4:26 ஆராயுங்கள்
3
நீதிமொழி 4:24
வஞ்சகத்தை உன் வாயிலிருந்து அகற்று, சீர்கேடான பேச்சுக்களை உன் உதடுகளிலிருந்து தூரமாய் விலக்கு.
நீதிமொழி 4:24 ஆராயுங்கள்
4
நீதிமொழி 4:7
ஞானத்தைப் பெற்றுக்கொள்வதே ஞானத்தின் ஆரம்பம்; உன்னிடம் உள்ளதையெல்லாம் செலவழிக்க வேண்டியதானாலும் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்.
நீதிமொழி 4:7 ஆராயுங்கள்
5
நீதிமொழி 4:18-19
நீதிமான்களின் பாதை நடுப்பகல் வரைக்கும் மேன்மேலும் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசத்தைப் போன்றது. ஆனால் கொடியவர்களின் வழியோ காரிருளைப் போன்றது; அவர்கள் தங்களை இடறப்பண்ணுவது எது என்பதை அறியார்கள்.
நீதிமொழி 4:18-19 ஆராயுங்கள்
6
நீதிமொழி 4:6
நீ ஞானத்தை விட்டுவிடாதே, அது உன்னைப் பாதுகாக்கும்; அதை நேசி, அது உன்னை காத்துக்கொள்ளும்.
நீதிமொழி 4:6 ஆராயுங்கள்
7
நீதிமொழி 4:13
அறிவுரைகளைப் பற்றிக்கொள், அவற்றை விட்டுவிடாதே; அதை நன்றாகக் காத்துக்கொள், அதுவே உன் வாழ்வு.
நீதிமொழி 4:13 ஆராயுங்கள்
8
நீதிமொழி 4:14
கொடியவர்களின் பாதையில் அடியெடுத்து வைக்காதே; தீய மனிதர்களின் வழியில் நீ நடக்காதே.
நீதிமொழி 4:14 ஆராயுங்கள்
9
நீதிமொழி 4:1
பிள்ளைகளே, தகப்பனின் அறிவுரைகளைக் கேளுங்கள்; கவனமாயிருந்து புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நீதிமொழி 4:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்