சவுல் யெகோவாவுக்கு முன்பாக உண்மையற்றவனாகக் காணப்பட்டதால் இறந்தான்; அதோடு அவன் யெகோவாவினுடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல் குறிபார்ப்பவர்களிடத்திலும் ஆலோசனை பெற்றான். அவன் யெகோவாவிடம் விசாரிக்கவில்லை. எனவே யெகோவா அவனைக் கொன்று, அரசாட்சியை ஈசாயின் மகனான தாவீதிற்குக் கொடுத்தார்.