நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன்,
என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன்,
அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்;
இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது;
என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது.