இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ரோமர் 8:16
நிச்சயம்
4 நாட்கள்
தேவனால் மன்னிக்கப்பட்டிருக்கிறேன்; பரலோகம் செல்வேன் என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய விருப்பம்! இந்த நிச்சயம் தேவனை சந்திப்பதன் மூலமாகவும் அவரது வார்த்தையை தியானம் செய்வதன் மூலமாகவும் அதிகரிக்கிறது. கீழ்க்கண்ட வசனங்களை மனப்பாடம் செய்வதால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் தேவனில் உறுதிப்பட அவை உங்களுக்கு உதவும். வேத வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை மாற்றப்படட்டும்! வேத வசனங்களை மனப்பாடம் செய்ய ஒரு விளக்க முறைக்கு செல்லவும் MemLok.com
புதிய ஆண்டு: ஒரு புதிய தொடக்கம்
5 நாட்கள்
ஒரு புதிய ஆண்டு ஒரு புதிய தொடக்கத்திற்கும் புதிய ஆரம்பத்திற்கும் சமம். உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானவற்றை மீட்டமைக்கவும், புதுப்பிக்கவும் மற்றும் கவனம் செலுத்தவும் இது ஒரு நேரம். நீங்கள் இயேசுவின் மூலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை அறிந்துகொள்வதன் மூலம் சிறந்த ஆண்டைக் கொண்டிருப்பது தொடங்குகிறது. புத்தாண்டில் புதிதாக வாழ்க!
தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்
7 நாட்கள்
ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததும், தேவசெய்தியை உங்களுக்கு நினைவூட்டினால் என்ன நடக்கும்? இந்த 7- நாள் தியானம் அதைத்தான் செய்து உங்களுக்கு உதவ முயற்சிக்கிறது! நற்செய்தி நம்மை இரட்சிக்கிறது மாத்திரமல்ல, அது நம் வாழ்நாள் முழுவதும் நம்மைக் காக்கவும் செய்கிறது. மாட் பிரௌன் மற்றும் ரையன் ஸ்கூக் என்பவர்களால் எழுதப் பட்ட 30-நாள் தியான புத்தகத்தை மையமாகக்கொண்டு ஆசிரியரும், சுவிசேஷகருமான மாட் பிரௌன் அவர்கள் இந்த வாசிப்புத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.
காலத்தால் அழியாத அதிசயம் | நியூ லைஃப் ஆலயத்திலிருந்து ஒரு கிறிஸ்துமஸ் வாசிப்பு திட்டம்
19 நாட்கள்
இந்த மூன்று வாரத் திட்டம், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக நமக்காக எப்படி வந்தார் என்ற காலவரம்பற்ற அதிசயத்தின் மூலம் நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தத் திட்டம் திங்கட்கிழமை தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் ஒவ்வொரு வார இறுதியில் விடுமுறைக் காலத்தில் ஓய்வு மற்றும் பிரதிபலிப்புக்கான குறுகிய உள்ளடக்கம் இருக்கும். கிறிஸ்துவின் பிறப்பு நமது எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்திற்கான அர்த்தம் என்ன என்பதைப் படிக்கும்படி எங்களுடன் சேருங்கள்.