இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 5:3

துதியின் அசாதாரண சக்தி: சங்கீதங்களிலிருந்து ஒரு 5 நாள் தியானம்
5 நாட்கள்
கவலை, பயம், தனிமை மற்றும் மனச்சோர்வு ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக உயர்ந்துள்ளன. சங்கீதக்காரர்கள் இந்த உணர்ச்சிகளுக்கு அந்நியர்கள் அல்ல. இருப்பினும், அவர்கள் போற்றுவதற்கான அசாதாரண சக்தியைக் கட்டவிழ்த்துவிடக் கற்றுக்கொண்டனர். இந்த திட்டத்தின்மூலம் அமைதியாக இருப்பதற்கான ரகசியத்தை சங்கீதங்களிலிருந்து கண்டறியவும்.

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்
5 நாட்களில்
அதிகாலை - உலகம் தூங்கி கொண்டிருக்கும்; தெருக்கள் அமைதியாக இருக்கும் - இருட்டான வேளை ஒரு விசேஷமான நேரம். பரலோகம் நெருக்கமாகநின்று உங்கள் ஜெபத்தை செவிகொடுத்துகேட்கும் நேரம். நீங்கள் அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் போது உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் சம்வங்கள் நடக்கும். நீங்கள் எனக்கு வழிதெரியவில்லை என்ற நான்கு வழி சந்திப்பில் நிறிகிறீர்களா? ஜெபவேளையில் - தேவன் தாம் பேசும் வார்த்தைகளை நீங்கள் எளிதில்புரிந்து கொள்வீர்கள்; அது வார்த்தைகளாக கூட இராது; தேவன் தரும் ஓர் அமைதியாக - "எனக்காக தேவன் யாவற்றையும் செய்து முடிப்பார்" என்ற நிச்சயம் தரும் வேளையாகவும் - அது இருக்கலாம். உலகை இருள் சூழ்ந்திருக்கும் - அமைதியான - அதிகாலை நேரத்தில் - தேவன் நமக்குள் தரும் வெளிச்சமும் அதிகரிக்கும். ஏனென்றால் தேவன் - நாம் நியமித்திருக்கும் – கடிகாரம் காட்டும் காலங்களுக்கு அப்பாற்பட்டவர். தேவ மைந்தன் இயேசுவே நமக்கு நல்ல முன்மாதிரி; இன்றைய வேதபகுதி மாற்கு 1:35 ஐ உங்கள் வேதாகமத்தில் எடுத்து வாசியுங்கள்- புரியும்.....

ஜெபம்
21 நாட்கள்
எப்படி ஜெபிப்பது என்று பக்தர்களின் ஜெபங்களிலிருந்தும் இயேசுவின் சொந்த வார்த்தைகளிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கோரிக்கைகளை தேவனிடம் தினமும், தொடர்ந்து பொறுமையாக எடுத்து செல்வதில் உற்சாகம் கண்டடையுங்கள். காலியான சுய நீதி நிறைந்த ஜெபங்களுக்கும், சுத்த இருதயத்திலிருந்து வரும் தூய்மையான ஜெபங்களுக்கும் மாதிரிகளை காணுங்கள். தொடர்ந்து ஜெபியுங்கள்.