இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 27:4
உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு வார்த்தை
4 நாட்கள்
ஆண்டு முழுவதும் ஒரு வார்த்தையில் மட்டும் கவனம் செலுத்துவதனால் உங்கள வாழ்க்கையை எளிமையாக்க 'ஒரு வார்த்தை' உதவுகிறது. தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் ஒரு வார்த்தையை கண்டறிவதன் எளிமை வாழ்க்கை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. குழப்பமும் சிக்கலும் தள்ளிப்போடுவதற்கும் முடக்குவதற்கும் நேராக நடத்துகின்றன, ஆனால் எளிமையும் ஒருமுகமும் வெற்றி மற்றும் தெளிவுக்கு நேராக நடத்துகின்றன. இந்த ஆண்டிற்கான ஒரு வார்த்தை தரிசனத்திற்கான மையத்தை அடைவது எப்படி என்று இந்த நான்கு நாள் தியானம் காட்டுகிறது.
உங்களுக்காக இங்கே காத்திருக்கிறேன், விசுவாசத்திற்கான ஒரு வருகையின் பயணம்
7 நாட்கள்
வருகை என்பது எதிர்பார்ப்புடனும் ஆயத்ததுடனும் காத்திருக்கும் காலமாகும். நீங்கள் கர்த்தரை நோக்கி காத்திருக்கும் போது உங்கள் காத்திருப்பு வீண் போகாது என்பதைக் கண்டறிய ஒரு வருகையின் பயணத்தில் போதகரும் எழுத்தாளருமான லூயி கிக்லியோவுடன் இணையுங்கள். இத்திட்டத்தின் கீழ் உள்ள வருகையின் பயணத்தின் மூலம் பரந்த விசுவாசத்தை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பைப் பற்றிக் கொள்ளுங்கள். அடுத்த ஏழு நாட்களில் உங்கள் ஆத்துமாவுக்கு அமைதியையும் ஊக்கத்தையும் இந்த வருகையின் நாட்களுக்கான எதிர்பார்ப்பின் காலங்களில் கண்டுணருங்கள்!
ஒரே விஷயம்
7 நாட்கள்
இந்த மனதை உலைக்கும் உலகில் இயேசுவுக்காக வாழ்வது என்னவென்று நாம் கண்டுபிடிக்கப் போகிறோம். இந்த உலகம் ஒரு நூறு மைல்கல் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது, நமக்குத் தேவையானதை விடக் கூடுதல் தகவல்கள் நம்முடைய கைகளில் உள்ளன. இது நவீன உலகத்தின் இயல்பா? இப்படிப் பறக்கிற சூழலில் நம்மை எப்படி நிதானப்படுத்திக் கொள்வது? சங்கீதம் 27:4 இல் அதற்கான பதில் உள்ளது – ஒரே ஒரு விஷயம், அந்திரேயா கார்ட்லெஜ்.
எனது நோக்கம் என்ன? கடவுளை நேசிக்கவும் மற்றவர்களை நேசிக்கவும் கற்றுக்கொள்வது
7 நாட்கள்
இயேசுவைப் பின்பற்றுபவராக உங்கள் நோக்கத்தை ஆராயுங்கள்: கடவுளை நேசிப்பது மற்றும் மற்றவர்களை நேசிப்பது. ஏழு நாட்களில், தனிப்பட்ட வழிபாடு, மாற்றம், இரக்கம், சேவை மற்றும் நீதி ஆகிய கருப்பொருள்களை நாம் பிரித்து ஆராய்வோம். ஒவ்வொரு தியானமும், அன்றைய கருப்பொருள், வேதத்திலிருந்து ஒரு பகுதி அல்லது இரண்டு பகுதிகள், இறையியல் கண்ணோட்டத்தில் ஒரு சிந்தனை, மற்றும் வாசிப்புக்குப் பயன்படுத்துவதற்கும் பதிலளிப்பதற்குமான வழிகளில் கவனம் செலுத்த உதவும் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது.
உண்மையான அன்பு என்ன?
12 நாட்கள்
அன்பு என்றால் உண்மையாக என்ன என்று எல்லாரும் அறிய விரும்புகிறோம். ஆனால், அன்பை பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது என்று சிலர் தான் பார்கின்றனர். அன்பு என்பது வேதாகமத்தின் ஒரு மைய கருத்து, மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான குணம். அன்பின் வேதாகம அர்த்தத்தையும், தேவனை மற்றும் மற்றவர்களை எப்படி நேசிப்பது என்றும் திசில்பென்ட் மினிஸ்ட்ரிஸின் இந்த திட்டம் ஆராய்கிறது.
சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்
13 நாட்கள்
சங்கீதம் 27 தாவீதின் ஒரு அற்புதமான சங்கீதம், இதில் உள்ள வசனங்களின் ஆழங்களை அறிவது சாலச்சிறந்தது மற்றும் இது நிச்சயமாக உன்னை ஊக்குவிக்கும்! அடுத்த சில நாட்களில் இதை தொடர்ந்து வாசி… ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்!
இது மேம்பட்ட வாசிப்பு திட்டம்
28 நாட்கள்
நீங்கள் திணறிக்கொண்டோ, அதிருப்தியிலோ, ஒரு செல்தடத்தில் மாட்டிகொண்டோ இருப்பதாக உணர்கிறீர்களா? தினசரி வாழ்வில் முன்னேற்றம் அடைய விரும்புகிறீர்களா? கர்த்தருடைய வார்த்தை ஒளிமிகும் நாட்களுக்கான உங்கள் வழிகாட்டியாகும். இந்த 28 நாள் வாசிப்புத் திட்டத்தில் நீங்கள் ஒரு சாதாரண நல்ல வாழ்வு வாழ்வதிலிருந்து, எவ்வாறு கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் சிறந்த வாழ்வை வாழலாமென்ற வழிமுறைகளைக் கண்டுகொள்வீர்கள்.