இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 16:11
பெருந்தோற்று காலங்களில் நம்பிக்கை
5 நாட்கள்
சமீபகாலமாக இதுவரை உலகம் பார்த்திராத ஒரு சூழ்நிலையில் இன்று நாம் கடந்து போய்கொண்டிருக்கிறோம். சர்வத்தையும் படைத்து ஆளுகிற ராஜாதி ராஜாவை அண்டிகொண்டால் பிழைத்துகொள்வோம் என்பதை சரித்திரமும் ஒத்துகொள்ளும். இப்படிப்பட்ட காரியங்கள் ஏன் சம்பவிக்கிறது, இந்த சூழ்நிலையில் தேவன் நமக்கு தரும் தீர்வு என்ன, மரணமானாலும் ஜீவனானாலும் அவைகளை குறித்த நமது நம்பிக்கை என்ன என்பதை குறித்து வேதம் நமக்கு என்ன கற்றுகொடுக்கிறது ஆகிய காரியங்களை குறித்து இந்த தியானத்திட்டதின் கீழ் நாம் படிக்க இருக்கிறோம்.
அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது?
7 நாட்கள்
பல பொறுப்புகளின் மத்தியில் தத்தளித்து கொண்டிருக்கிறாயா? குடும்ப பாரம், வேலை பாரம், சமுதாய பாரம் என்று பலவிதமான பாரங்கள் உன்னை அழுத்துகிறதா? எல்லா பாரங்களும் பிரச்சனைகளும் உன்னை அநேக சிந்தனைகளில் ஆழ்த்துகிறதா? எதை செய்யவேண்டுமென்று தெரியாத குழப்பமா? நாம் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையை கடந்து செல்கிறோம். ஆண்டவர் இயேசு இதற்கான பதில்களையும் இதுபோன்ற மன உளைச்சலில் இருந்து விடுபட்டு மீண்டும் நாம் விழாமல் எப்படி காத்துக்கொள்வது என்பது பற்றியும் வேதாகமத்தின் மூலம் நம்மிடம் பேசியுள்ளார். இதையே நாம் இந்த திட்டத்தில் கண்டறியப்போகிறோம்.
பயணத்திற்கான மகிழ்ச்சி: சோதனையின் நடுவில் நம்பிக்கையைக் கண்டறிதல்
7 நாட்கள்
நாம் அதை எப்போதும் பார்க்கவோ உணரவோ முடியாது, ஆனால் தேவன் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார்... நாம் கடினமான விஷயங்களைச் சந்திக்கும் போதும். இந்தத் திட்டத்தில், ஃபைண்டிங் ஹோப் ஒருங்கிணைப்பாளர் ஆமி லாரூ தனது சொந்த குடும்பத்தின் அடிமைத்தனத்துடன் போராடுவதைப் பற்றியும், தேவனின் மகிழ்ச்சி அவர்களின் இருண்ட காலங்களில் எவ்வாறு உடைந்தது என்பதைப் பற்றியும் இதயத்திலிருந்து எழுதுகிறார்.