இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 119:11

வேதாகமத்தை எப்படி வாசிக்க துவங்குவது
4 நாட்கள்
உண்மையை ஏற்றுக்கொள்வோம்.: நாம் வேதாகமத்தை வாசிப்பது நல்லது என்று உணருகிறோம், ஆனால் எங்கு வாசிக்க துவங்குவது என்று தெரியாமல் இருக்கிறோம். இனி வரும் நான்கு நாட்களில், வேதாகமம் ஏன் முக்கியமானது என்றும், எவ்வாறு தினந்தோறும் வேதத்தை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவது என்றும், நம் வாழ்வில் அது எவ்வாறு உதவும் என்றும் நாம் கற்றுக்கொள்வோம்.

கிரேக் மற்றும் ஏமி கிரோஸ்செல் அவர்களின் இந்த நாள் முதல்
7 நாட்கள்
ஒரு மேன்மையான திருமண வாழ்க்கை உங்களுக்கு ஏற்பட முடியும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் தான் நாளை உங்களுக்கு அமையும் திருமண வாழ்வை நிர்ணயம் செய்யும். பாஸ்டரும் நியூ யார்க் டைம்ஸ் அதிக விற்பனையாகும் எழுத்தாளருமான கிரேக் கிரோஸ்செல் மற்றும் அவரது மனைவி ஏமி, உங்கள் மண வாழ்வு வெற்றியடைய செய்யக்கூடிய ஐந்து உறுதிப்பாடுகளை காட்டுகிறார்கள்: தேவனை தேடுதல், நியாயமாக சண்டை போடுதல், மகிழ்ச்சியாக இருத்தல், தூய்மையை காத்தல், கைவிடாதிருத்தல். நீங்கள் எப்போதும் விரும்பிய திருமண வாழ்க்கையை இப்போதிலிருந்து பெற்று கொள்ளலாம் — இந்த நாள் முதல்.

இயேசு என்னை நேசிக்கிறார்
7 நாட்கள்
யாரோ ஒருவர், "நான் கிறிஸ்தவனாயிருப்பதற்கு எதை விசுவாசிக்க வேண்டும்?" என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? "இயேசு என்னை நேசிக்கிறார், இதை நான் அறிவேன், ஏனெனில் வேதாகமம் அவ்வாறு சொல்லுகிறது”, என்ற நேசிக்கப்படுகிற பாடலின் வரிகளைக் கொண்டு எதை விசுவாசிக்க வேண்டும் ஏன் என்று பத்திரிக்கையாளராய் இருந்து போதகரானவர் விளக்குகிறார். சிறந்த ஆசிரியர் ஜான் எஸ், டிக்கர்சன் அவசியமான கிறிஸ்தவ நம்பிக்கைகளையும் அவை எதனால் முக்கியம் என்பதை உண்மையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.