இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 6:14
இயேசுவைப் போலவே மன்னிப்பது
5 நாட்கள்
மன்னிப்பு என்பது இயேசுவின் போதனைகளில் ஒரு முக்கிய கருத்தாகும், மன்னிப்பு அவருடைய சாயலைப் பிரதிபலிக்கிறது, மற்றும் கிருபை மற்றும் அன்பின் பாதையில் நம்மை வழிநடத்துகிறது.மத் 6:14-ல், இயேசு மன்னிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.” I இந்த எளிய மற்றும் முக்கியமான செய்தி, வேதவாக்கியங்களின்படி மன்னிப்பு ஏன் முக்கியமானது என்பதை வெளிப்படுத்துகிறது,ஏனெனில் அது தேவனுடனான நமது உறவை பிரதிபலிக்கிறது. நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது, நம்முடைய பரலோக பிதாவினிடமிருந்து நாம் பெறும் மன்னிப்பை பிரதிபலிக்கிறோம்.
நம்மை புண்படுத்தியவரை மன்னிப்பது
7 நாட்கள்
நாம் உணர்ச்சி அல்லது உடல் ரீதியான காயங்களால் அல்லல் பட்டாலும், மன்னிப்பதே கிறிஸ்தவ வாழ்க்கையின் மூலக்கல்லாகும். இயேசு கிறிஸ்து அனைத்து வகையான அநியாயங்கள் மற்றும் அநீதிகளை அனுபவித்தார், அதுவும் நேர்மைகேடான மரணம் வரையும். ஆயினும், அவரது இறுதி நேரத்தில் மற்ற சிலுவையில் கேலி செய்த திருடனையும், அவரது வதகன்களையும் மன்னித்தார்.
அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்
7 நாட்கள்
நாம் அனைவரும் எதையாவது நாடிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஒரு சிறந்த வேலை, ஒரு வசதியான வீடு, சரியான குடும்பம், மற்றவர்களின் ஒப்புதல் இவைகள் போன்ற பொதுவாக நம்மால் அடையமுடியாதவைகளின் பின்னே சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் இது சோர்வுறப் பண்ணுகிறதாய் இல்லை? வேறு ஏதாவது சிறந்த வழி இருக்கிறதா? Life.church இன் இந்தப் புதிய வேதாகமத் திட்டத்தில், இணை போதகர் க்ரெய்க் க்ரோஷெலின் 'அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்' என்ற செய்தித் தொடரின் வாயிலாக அதைக் கண்டறிவோம்.
21 நாள் உபவாசம்
21 நாட்கள்
உங்களுடைய புதிய வருடத்தை உபவாசம் எனும் ஆவிக்குரிய ஒழுங்கின் மீதான கருத்துடன் துவங்கவும். இந்த திட்டம் உபவாசத்தை குறித்தும் தேவனை பற்றி மீண்டும் சிந்திக்க மற்றும் அவரோடு கிட்ட சேரும்படி ஊக்குவிக்கும் விதத்திலும் பல வசனங்களை கொண்டுள்ளது. 21 நாட்களுக்கு, தின வேதாகம வாசிப்பு, சிறிய தியானம், சிந்திக்க வைக்கும் கேள்விகள் மற்றும் ஜெபத்தை கொண்டுள்ளது. மேலும் உள்ளடக்கங்களுக்கு, www.finds.life.church ஐ பார்க்கவும்.
நிரம்பி வழிய 21 நாட்கள்
21 நாட்கள்
நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
இது மேம்பட்ட வாசிப்பு திட்டம்
28 நாட்கள்
நீங்கள் திணறிக்கொண்டோ, அதிருப்தியிலோ, ஒரு செல்தடத்தில் மாட்டிகொண்டோ இருப்பதாக உணர்கிறீர்களா? தினசரி வாழ்வில் முன்னேற்றம் அடைய விரும்புகிறீர்களா? கர்த்தருடைய வார்த்தை ஒளிமிகும் நாட்களுக்கான உங்கள் வழிகாட்டியாகும். இந்த 28 நாள் வாசிப்புத் திட்டத்தில் நீங்கள் ஒரு சாதாரண நல்ல வாழ்வு வாழ்வதிலிருந்து, எவ்வாறு கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் சிறந்த வாழ்வை வாழலாமென்ற வழிமுறைகளைக் கண்டுகொள்வீர்கள்.