இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 22:37
சிறப்பின் ஊழியம்
3 நாட்கள்
நம் வேலையில் சிறந்து விளங்குவதற்கு பல நல்ல காரணங்கள் உள்ளன: சிறப்பானது நமது வாழ்க்கையை மேம்படுத்துகிறது, நமக்கு செல்வாக்கை அளிக்கிறது, மேலும் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். ஆனால் இந்த மூன்று நாள் திட்டம் காட்டுவது போல், மிக அடிப்படையான காரணத்திற்காக நாம் சிறந்து விளங்க வேண்டும்-ஏனென்றால், சிறந்து விளங்குவது என்பது கடவுளின் தன்மையை எவ்வாறு நாம் சிறப்பாக பிரதிபலிக்கிறோம் என்பதும் மற்றும் நாம் தேர்ந்தெடுத்த வேலையின் மூலம் நம்மைப் போலவே நம் அண்டை வீட்டாரை நேசிப்பது மற்றும் சேவை செய்வது.
நேசியுங்கள், தொடர்ந்து நேசியுங்கள்
3 நாட்கள்
அன்பை கொண்டாடுவது என்பது ஒரு குறிப்பிட்ட தேதிக்கு அப்பாற்பட்டது; கடவுளின் அன்பு குணப்படுத்தவும், மீட்டெடுக்கவும், அவருடைய நன்மையை அறிவிக்கும் ஒரு வாழ்க்கையை நமக்கு வழங்கவும் வந்தது என்பதைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு நினைவூட்டும் வாழ்க்கை அது. அன்பு எதைப் பிரதிபலிக்கிறது மற்றும் கடவுள் விரும்புவதைப் போல மற்றவர்களை நேசிப்பது எப்படி இருக்கும் என்று மூன்று நாள் ஆய்வுக்கு செல்ல உங்களை அழைக்கிறேன்.
தேவன் + இலக்குகள்: ஒரு கிறிஸ்தவராக இலக்குகளை எவ்வாறு அமைப்பது
5 நாட்கள்
ஒரு கிறிஸ்தவராக நமக்காக ஒரு இலக்கை வைத்துக்கொள்வது சரியா? நமக்கு எப்படி தெரியும் அந்த இலக்கு தேவனிடமிருந்து வந்ததா அல்லது நமது ஆசையா என்று? சரி, கிறிஸ்தவ இலக்கு எப்படி இருக்கும்? இந்த 5 நாள் வாசிப்பு திட்டத்தில், வேதத்தை முற்றும் குடைந்து இந்த இலக்கை குறித்ததான பகுதியில் ஒரு தெளிவைப் பெற போகிறோம். அது மட்டுமல்லாது நமது திசையையும் அந்த கிருபையால் இயங்கும் இலக்கை நோக்கி திருப்ப போகிறோம்!
அன்பில் வளருதல்
5 நாட்கள்
தேவனை நேசிப்பதும் மற்றவர்களை நேசிப்பதும் உண்மையில் முக்கியமானது, ஆனால் அதை எவ்வாறு திறம்பட செய்வது? உண்மை என்னவென்றால், நம் சொந்த முயற்சியில் நாம் மக்களை நன்றாக நேசிக்க முடியாது. ஆனால் நாம் தேவனைப் பார்த்து, மனத்தாழ்மையில் நம்மைக் கிடக்கப்பண்ணும் போது, தேவனின் உண்மையான மற்றும் வல்லமை வாய்ந்த அன்பிலிருந்து நாம் வாழ முடியும். இந்த 5 நாள் வேதாகமத் திட்டத்தில் அன்பில் வளர்வது பற்றி பாஸ்டர் ஏமி க்ரோஷெல் மூலம் மேலும் அறிக.
தெய்வீக கால நிர்வாகம்
6 நாட்கள்
உலகப்பிரகாரமாக நேரத்தை நன்மையாக கடைபிடிக்கும் பொது நம்முடைய சொந்த பெலத்தாலும் சுய ஒழுங்கினாலும் வாழ்க்கையை அடக்க முயலுவது மன அழுத்தத்தை உண்டாக்கும். வேதாகமம் சொல்கிறது நம்முடைய நேரத்தை தேவனிடம் விசுவாசித்து கொடுக்கும்போது நாம் சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் பெற்றுக்கொள்வோம் என்று. இந்த 6 நாள் திட்டத்தில், நேரத்தை தேவனோடு கால நிர்வாகம் செய்யும்பொழுது தேவன் கொண்டிருக்கும் எல்லா நன்மைகளையும், அவருடைய சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும் என்று கற்றுக்கொள்வோம்.
மனப்பான்மை
7 நாட்கள்
ஒவ்வொரு சூழ்நிலையிலும் சரியான மனப்பான்மையை கொண்டிருப்பது உண்மையாகவே ஒரு சவால் தான். இந்த ஏழு நாள் வாசிப்பு திட்டம் உங்களுக்கு ஒரு வேதாகம கண்ணோட்டத்தை கொடுப்பதோடு ஒவ்வொரு நாளும் வாசிக்க ஒரு குறுகிய பகுதியையும் கொண்டுள்ளது. வேதப்பகுதியை வாசித்து, உங்களையே நேர்மையாக ஆராய சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சூழ்நிலைக்குள் தேவனை பேச அனுமதியுங்கள்.
கிரேக் மற்றும் ஏமி கிரோஸ்செல் அவர்களின் இந்த நாள் முதல்
7 நாட்கள்
ஒரு மேன்மையான திருமண வாழ்க்கை உங்களுக்கு ஏற்பட முடியும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் தான் நாளை உங்களுக்கு அமையும் திருமண வாழ்வை நிர்ணயம் செய்யும். பாஸ்டரும் நியூ யார்க் டைம்ஸ் அதிக விற்பனையாகும் எழுத்தாளருமான கிரேக் கிரோஸ்செல் மற்றும் அவரது மனைவி ஏமி, உங்கள் மண வாழ்வு வெற்றியடைய செய்யக்கூடிய ஐந்து உறுதிப்பாடுகளை காட்டுகிறார்கள்: தேவனை தேடுதல், நியாயமாக சண்டை போடுதல், மகிழ்ச்சியாக இருத்தல், தூய்மையை காத்தல், கைவிடாதிருத்தல். நீங்கள் எப்போதும் விரும்பிய திருமண வாழ்க்கையை இப்போதிலிருந்து பெற்று கொள்ளலாம் — இந்த நாள் முதல்.
கூட்டாக: ஒன்றாக வாழ்க்கையை கண்டறிவது
7 நாட்கள்
நீங்கள் 18 வயதை அடைந்ததும், உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. ஆனால் முடியவில்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் எங்கே இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களோ அங்கே இப்பொழுது நீங்கள் இல்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் தனியாக இல்லை. Life.Church இன் இளைஞர்களுக்கான ஒரு வேதபாடமாகிய "கூட்டாக" என்பது வழங்கும் இந்த 7 நாள் வேதாகமத் திட்டத்தில், வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளை நாம் ஒன்றுசேர்ந்து கண்டுபிடிப்போம்.