இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 20:29
தெய்வீக திசை
7 நாட்கள்
தினம்தோறும் நாம் வாழ்க்கையின் கதையை வடிவமைக்கும் முடிவுகளை தேர்ந்தெடுக்கிறோம். ஒருவேளை இப்படி தேர்ந்தெடுப்பதில் நீங்கள் தேறினவராகிவிட்டால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? நியூயார்க் டைம்ஸ் சிறந்த எழுத்தாளர் மற்றும் லைஃ.சர்ச் தலைமை போதகரான க்ரைக் குரோவ்ஷெல் எழுதின தெய்வீக திசை வேதாகம திட்டம், அவருடைய தெய்வீக திசை என்ற புத்தகத்திலிருந்து ஏழு அடிப்படை கொள்கைகளைக் கொண்டிருக்கிறது, அது நாம் தினந்தோறும் தேவ ஞானத்துடன் முடிவுகளை எடுக்க நமக்கு உதவி செய்து ஊக்கப்படுத்துகிறது. தேவன் மகிமைப் படும்படியான, மற்றும் மற்றவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதான ஒரு வாழ்க்கைக் கதை நீங்கள் வாழத் தேவையான ஆவியின் வழிகாட்டுதலை இத்திட்டத்தில் கண்டறிக.
இறுதி பாடங்கள்: ஒரு புனித வாரத்திற்கான திட்டம்
10 நாட்கள்
இந்த புனித வாரத்தில் நாம் சற்று வேகத்தை குறைத்து, கிறிஸ்து உலகத்திலிருந்த இறுதி நாட்களிலிருந்து கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும், அவர் கொடுக்க நேரம் எடுத்துக்கொண்ட பாடங்கள் அல்லது பரிசுகளை நாம் ஒவ்வொரு நாளும் பெற்றுகொள்வோம். கிறிஸ்துவுக்கு அதிக முக்கியமாக இருந்தவையாகிய அவரது மக்களை நாம் நேசிக்க வேண்டும் என்பதையும் அவரை பின்பற்ற வேண்டும் என்பதையும் பற்றி உங்களுக்கு ஒரு புதிய நினைப்பூட்டுதல் வேண்டுமா? இந்த புனித வாரத்தில் அவர் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறார்?
விசுவாசம்
12 நாட்கள்
காண்பது நம்பிக்கையா? அல்லது நம்பிக்கை காண்பதா? இவை விசுவாசத்தைக் குறித்த கேள்விகள். இந்தத் திட்டம் விசுவாசத்தைக் குறித்த ஆழ்ந்த ஆய்வாகும் - பழைய ஏற்பாட்டிலிருந்து உண்மை தைரியமுள்ள விசுவாசத்தை அசாத்தியமான சூழ்நிலைகளில் நிரூபித்தவர்களின் நிகழ்வுகள் முதற்கொண்டு விசுவாசத்தைப் பற்றிய இயேசுவின் உபதேசங்களும் இதில் அடங்கும். உங்கள் வாசிப்புகளின் மூலம் கர்த்தருடனான உங்கள் உறவை ஆழமாக்கி இயேசுவின் அதிக விசுவாசமுள்ள தொண்டராக ஆகும்படி ஊக்குவிக்கப்படுவீர்கள்.