இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 20:13
துக்கம்
5 நாட்கள்
துக்கத்தை தாங்கக்கூடாததாக உணரலாம். நல்ல மனப்பான்மை கொண்ட நண்பரும் உறவினரும் என்னதான் ஆறுதலும் உற்சாகமும் அளித்தாலும், நம்மை யாருமே புரிந்து கொள்ளாததாகவே நாம் உணர்வோம் - நாம் மட்டுமே தனியாக துக்கத்தில் உழல்வதைப் போல. இந்தத் திட்டத்தில், நீங்கள் கர்த்தர் அருளும் கண்ணோட்டத்தைக் கண்டுகொள்ள உதவும் ஆறுதலான வேத பகுதிகளை ஆராயலாம், உங்கள் மேல் நம் இரட்சகருடைய மிகுந்த கரிசனையை உணரலாம், உங்கள் வேதனையிலிருந்து விடுதலையையும் அனுபவிக்கலாம்.
இயேசுவின் உயிர்த்தெழுதல் உணர்த்தும் சத்தியம்!
6 நாட்கள்
ஒருமுறை, தம்முடைய மரணத்தையே ஒருவர் முன்னறிவித்தார். அவர் தமது மரணத்தை அறிவித்தது மட்டுமல்ல, 3 நாட்களில் உயிரோடு எழுந்திருப்பேன் என்றும் அறிவித்தார். ஆம், அவர் தாம் முன்னறிவித்தபடியே மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்! அவர் பெயர், இயேசு! அவருடைய மரணமும் உயிர்த்தெழுதலும் சத்தியமானவை. அவைகளை நினைவு கூறும் வண்ணமாகவே இந்த ஈஸ்டர் நாளை உலகம் முழுவதும் இருக்கிற கிறிஸ்தவர்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். இயேசு உயிர்த்தெழுந்த சத்தியம் நமக்கு இன்று உணர்த்துவது என்னென்ன என்பதை அடுத்த சில நாட்களில் இந்த வேதாகம திட்டத்தின் கீழ் நாம் தியானிக்க இருக்கிறோம்!
இறுதி பாடங்கள்: ஒரு புனித வாரத்திற்கான திட்டம்
10 நாட்கள்
இந்த புனித வாரத்தில் நாம் சற்று வேகத்தை குறைத்து, கிறிஸ்து உலகத்திலிருந்த இறுதி நாட்களிலிருந்து கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும், அவர் கொடுக்க நேரம் எடுத்துக்கொண்ட பாடங்கள் அல்லது பரிசுகளை நாம் ஒவ்வொரு நாளும் பெற்றுகொள்வோம். கிறிஸ்துவுக்கு அதிக முக்கியமாக இருந்தவையாகிய அவரது மக்களை நாம் நேசிக்க வேண்டும் என்பதையும் அவரை பின்பற்ற வேண்டும் என்பதையும் பற்றி உங்களுக்கு ஒரு புதிய நினைப்பூட்டுதல் வேண்டுமா? இந்த புனித வாரத்தில் அவர் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறார்?
தைரியமான குழந்தைகள்
28 நாட்கள்
தைரியத்தை வெளிப்படுத்திய அற்புதமான மனிதர்களின் உதாரணங்களால் பைபிள் நிரம்பியுள்ளது. ஆனால் ஒரு குழந்தை தனது சாதாரண வாழ்க்கையில் அசாதாரண தைரியத்துடன் வாழ முடியுமா? இந்தத் திட்டத்தில் சில பைபிள் பெரியவர்களின் குழந்தைகளுக்கு ஏற்ற சில வீடியோக்கள் உள்ளன, மேலும் கிறிஸ்துவுடன் நம் அன்றாட நடைப்பயணத்தில் தைரியமாக வாழ்வதற்கு சவால் விடும் பிற வசனங்கள் மற்றும் பத்திகளை ஆராய்வதன் மூலம் அவர்களின் தைரியமான கதைகள் மூலம் நம்மை அழைத்துச் செல்கிறது.