இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 17:3
இயேசுவின் ஜெபங்கள்
5 நாட்கள்
நம் உறவுகளில் தொடர்பு எனபது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிவோம், கர்த்தருடனான தொடர்பும் அதற்கு விதிவிலக்கல்ல. நாம் கர்த்தருடன் ஜெபத்தின் மூலம் தொடர்பு கொள்ளவேண்டுமென்று ஆசிக்கிறார் - அவரது குமாரனான இயேசு கூட அதே ஒழுங்குமுறையைத் தான் கடைப்பிடித்தார். இந்தத் திட்டத்தில் இயேசுவின் முன்மாதிரியிலிருந்து கற்றுக் கொண்டு உலக வாழ்வின் போக்கிலிருந்து விடுபட்டு ஜெபம் தரும் வல்லமை மற்றும் வழிநடத்தலை நீங்களே அனுபவிக்கலாம்.
உண்மைக் கர்த்தர்
7 நாட்கள்
நீங்கள் கர்த்தரை எவ்வாறு காண்கிறீர்கள்? இதற்கான பதிலானது உங்களையும், உங்கள் விசுவாசத்தையும், உங்களைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தையும், மனப்பாங்குகளையும், உறவுகளையும், இலக்குகளையும் - உங்கள் முழு வாழ்க்கையையும் வனைகின்றது. கர்த்தரைப் பற்றிய தவறான கண்ணோட்டம் வாழ்வின் போராட்டங்களிலேயே உழன்று கொண்டிருக்க வைக்கும். உண்மையான கர்த்தரை நாம் நன்றாக உற்றுப் பார்க்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அது ஞானமுள்ள செயல். அதனால் உங்களது வாழ்க்கையும் வல்லமையான வழியில் மாற்றம் பெறும்.