இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எரேமியா 29:13
துக்கம் வலியைக் கொடுக்கக்கூடியது: விடுமுறைக்கான நம்பிக்கை
5 நாட்கள்
பலருக்கு, விடுமுறைகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன... ஆனால் ஆழ்ந்த துக்கம் அல்லது இழப்பின் காரணமாக விடுமுறைகள் பிரகாசத்தை இழந்து சவாலாக மாறும்போது என்ன நடக்கும்? இந்த சிறப்பு வாசிப்புத் திட்டம், துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலையும் விடுமுறை நாட்களுக்கான நம்பிக்கையையும் பெற உதவும், மேலும் ஆழ்ந்த துக்கத்தின் மத்தியிலும் ஒரு அர்த்தமுள்ள விடுமுறை காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பகிர்ந்து கொள்கிறது.
கர்த்தர் என்னை ஏன் நேசிக்கிறார்?
5 நாட்கள்
கேள்விகள்: கர்த்தரைப் பொறுத்தவரையில் நம் எல்லோருக்குமே இவை உண்டு. நமது 'ஒப்பிட்டுப் பார்க்கும் கலாச்சாரம்', நம்மை மிக அந்தரங்கமான கேள்விகளை நம்மையே கேட்க வைக்கிறது: "கர்த்தர் என்னை ஏன் நேசிக்கிறார்?" அல்லது "எப்படி அவர் என்னை நேசிக்க முடியும்?" என்று கூட கேட்கலாம். இந்த திட்டத்தில் 26 வேத பகுதிகளுடன் நீங்கள் ஈடுபடுத்தப்படுவீர்கள்- அவை உங்கள் மீதான கர்த்தரின் அன்பு நிபந்தனையற்றது என்ற உண்மையை எடுத்துக்கூறும்.
ஆண்டவர் உங்கள் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் திட்டம் என்ன?
6 நாட்களில்
இந்த திட்டத்தில் எரேமியா 29:11ல் உள்ள வசனத்தை நாம் ஆழமாக தியானிக்க துவங்குவோம். வேதாகமத்திலேயே நான் மிகவும் நேசிக்கும் ஒரு வசனம் தான் இது. "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார்; "அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." ஒவ்வொரு நாளும் நம்முடைய விசுவாசத்தில் நாம் இன்னும் அதிகமாக வளர, இந்த வசனத்தின் ஒவ்வொரு பகுதியையும் விரிவாகப் படித்து அதிலிருந்து போதனைகள் மற்றும் விதிமுறைகளைப் பெற்றுக்கொள்வோம்.
பளு அதிகம் இல்லாத பயணம் செய்
7 நாட்கள்
மும்முரமான கிறிஸ்துமஸ் காலத்தில், நம்மில் அநேகர் குடும்ப உறவுகள், பண பிரச்சனைகள், அவசர முடிவுகள் மற்றும் ஏமாற்றமளிக்கும் எதிர்பார்ப்புகளின் அழுத்தத்தை உணருகிறோம். ஆகவே தொடர்ந்து வாசியுங்கள். பொறுமையாக ஒரு மூச்சு விடுங்கள். இந்த 'Life Church' இன் வேதாகம திட்டத்தை வாசித்து தேவன் நாம் சுமக்க சொல்லாத அநேக பாரங்களை நாம் சுமந்து கொண்டிருப்பதை உணருங்கள். இந்த பாரங்களை இறக்கி வைத்துவிட்டால் என்ன? பளு அதிகம் இல்லாத பயணம் செயலாம்.
ஒரே விஷயம்
7 நாட்கள்
இந்த மனதை உலைக்கும் உலகில் இயேசுவுக்காக வாழ்வது என்னவென்று நாம் கண்டுபிடிக்கப் போகிறோம். இந்த உலகம் ஒரு நூறு மைல்கல் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது, நமக்குத் தேவையானதை விடக் கூடுதல் தகவல்கள் நம்முடைய கைகளில் உள்ளன. இது நவீன உலகத்தின் இயல்பா? இப்படிப் பறக்கிற சூழலில் நம்மை எப்படி நிதானப்படுத்திக் கொள்வது? சங்கீதம் 27:4 இல் அதற்கான பதில் உள்ளது – ஒரே ஒரு விஷயம், அந்திரேயா கார்ட்லெஜ்.
பயணத்திற்கான மகிழ்ச்சி: சோதனையின் நடுவில் நம்பிக்கையைக் கண்டறிதல்
7 நாட்கள்
நாம் அதை எப்போதும் பார்க்கவோ உணரவோ முடியாது, ஆனால் தேவன் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார்... நாம் கடினமான விஷயங்களைச் சந்திக்கும் போதும். இந்தத் திட்டத்தில், ஃபைண்டிங் ஹோப் ஒருங்கிணைப்பாளர் ஆமி லாரூ தனது சொந்த குடும்பத்தின் அடிமைத்தனத்துடன் போராடுவதைப் பற்றியும், தேவனின் மகிழ்ச்சி அவர்களின் இருண்ட காலங்களில் எவ்வாறு உடைந்தது என்பதைப் பற்றியும் இதயத்திலிருந்து எழுதுகிறார்.