இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ஏசாயா 43:19

அன்புள்ள அடிமைத்தனமே...
5 நாட்கள்
"அன்புள்ள அடிமைத்தனம்..." என்பது 5 நாள் வாசிப்புத் திட்டமாகும், இது அடிமைத்தனத்தின் வேதாகம நிலைப்பாட்டினை நமக்கு எடுத்துரைக்கிறது. இது நமது போராட்டங்களைக் குறித்து மிகவும் நுண்ணறிவு மற்றும் சக்தி வாய்ந்த வார்த்தைகளை வழங்குகிறது, இந்த திட்டம் உங்களுக்கு ஆறுதல் வழங்கி நீங்கள் இரட்சிக்கப்பட உதவ நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்!

உறுதிமொழி
6 நாட்கள்
இந்த லயிஃப் சபையின் வேதாகம திட்டத்தில், ஆறு தம்பதியினர் சபையில் அதிகாரப்பூர்வமாக சொல்லாத ஆறு திருமண உறுதிமொழிகளைப் பற்றி எழுதுகிறார்கள். ஆயத்தம், முன்னுரிமை, பின்தொடர்தல், ஒற்றுமை, தூய்மை மற்றும் பிரார்த்தனை ஆகிய இந்த உறுதிமொழிகளே திருமணத்திற்கு முன்பே திருமணங்களை நிலைக்க செய்கின்றன. நீங்கள் திருமணமானவராக இருந்தாலும் சரி அல்லது அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பவராக இருந்தாலும் சரி, உறுதிமொழி எடுக்க வேண்டிய நேரம் இது

சமாதானத்தை நாடுதல்
7 நாட்கள்
Tearfund நிறுவனம் , எப்படி சமாதானத்தின் குரலாகவும், உறவுகள் மீண்டும் சேர்க்கவும், உலகம் முழுவதும் சமூகங்கள் மத்தியில் ஒற்றுமையை முற்படுத்தி, தேவனுடைய வழிநடத்துதலை தேடுகிறது.இந்த 7 நாள் ஆய்வு, உங்கள் சொந்த உறவுகளை மீட்டெடுப்பதற்கும், அன்றாட நடவடிக்கைகளான, நாம் வாழும் உலகத்திற்காக பிரார்த்தனை செய்வதற்கும் . ஆப்பிரிக்கா பழமொழிகளிலிருந்து செழிப்பான ஞானத்தைப் பயன்படுத்தி, தேவனுடைய உண்மையான சமாதானத்தைக் கண்டுபிடிக்க உதவும்.

தெய்வீக திசை
7 நாட்கள்
தினம்தோறும் நாம் வாழ்க்கையின் கதையை வடிவமைக்கும் முடிவுகளை தேர்ந்தெடுக்கிறோம். ஒருவேளை இப்படி தேர்ந்தெடுப்பதில் நீங்கள் தேறினவராகிவிட்டால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? நியூயார்க் டைம்ஸ் சிறந்த எழுத்தாளர் மற்றும் லைஃ.சர்ச் தலைமை போதகரான க்ரைக் குரோவ்ஷெல் எழுதின தெய்வீக திசை வேதாகம திட்டம், அவருடைய தெய்வீக திசை என்ற புத்தகத்திலிருந்து ஏழு அடிப்படை கொள்கைகளைக் கொண்டிருக்கிறது, அது நாம் தினந்தோறும் தேவ ஞானத்துடன் முடிவுகளை எடுக்க நமக்கு உதவி செய்து ஊக்கப்படுத்துகிறது. தேவன் மகிமைப் படும்படியான, மற்றும் மற்றவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதான ஒரு வாழ்க்கைக் கதை நீங்கள் வாழத் தேவையான ஆவியின் வழிகாட்டுதலை இத்திட்டத்தில் கண்டறிக.

பரிசுத்த யுத்தம்: கடின உழைப்பை தழுவுங்கள், நன்கு-ஓய்வு கொள்ளுங்கள்
10 நாட்கள்
சமநிலை. இது நாம் நமது வாழ்வில் கேட்கும்"கடினமாக உழையுங்கள்!" என்ற சத்தங்களின் மத்தியிலும் "இன்னும் ஓய்வுக்கொள்ளுங்கள்" என்ற முறுமுறுப்புகளின் மத்தியிலும், அதிகமாக ஏங்கும் ஒரே காரியம். நமது வாழ்விற்கான தேவனின் திட்டம் அது அல்லது இதுவாக இருந்தால் என்ன செய்வீர்கள்? பரிசுத்த யுதத்திற்குள் சேருங்கள்-கடின உழைப்பின் வாழ்க்கை மற்றும் நன்கு ஓய்வெடுக்கும் தேவனை கௌரவிக்கும் வழிகள்.

வாழ்க்கையின் புயல்களில் தேவனின் சத்தியத்தை கண்டுபிடித்தல்
10 நாட்கள்
கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகின் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க படுவதில்லை. உண்மையில், பிரச்சனைகள் வரும் என்று யோவான் 16:33 உறுதியளிக்கிறது. நீங்கள் இப்போது வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்கிறீர்கள் என்றால், இந்த தியானம் உங்களுக்கானது. வாழ்க்கையின் புயல்களினுடாய் நமக்கு கிடைக்கும் நம்பிக்கையின் நினைவூட்டல் இது. இப்பொழுது நீங்கள் எந்தப் போராட்டத்தையும் எதிர்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் வரும் சோதனைகளில் உங்களுக்கு உதவும் அடித்தளத்தை அது உங்களுக்கு வழங்கும்.