இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எபிரெயர் 4:16
பரிசு
5 நாட்கள்
இது ஆண்டின் மிக அற்புதமான நேரம், ஆனால் விடுமுறை நாட்கள் பொதுவாக நாம் கண்ணை மூடி திறப்பதற்குள் வேகமாக கடந்து செல்லும். இந்த கிறிஸ்மஸ் காலங்களில், நாம் வேதத்தை தியானிப்பதன் மூலம் நம் வாழ்வின் அதிசயங்களை மறுபடியும் மீட்டெடுக்க மற்றும் புதுப்பிக்க அழைக்கப்படுகிறோம். பாஸ்டர் கிரேக் க்ரோஷலின் தொடரான "பரிசு" உடன் வரும் இந்த 5-நாள் பைபிள் திட்டத்தில், ஞானிகள் இயேசுவுக்குக் கொடுத்த மூன்று பரிசுகள் எவ்வாறு நம்மை ஆச்சரியப்படுத்துவதற்கும், இயேசு கிறிஸ்துவை வழிபடுவதற்கும் வழிவகுக்கும் என்பதைக் கண்டுபிடிக்க இருக்கிறோம்.
இந்த உலகளாவிய பெருந்தொற்றின் போது பயத்திற்கு பதிலாக விசுவாசத்தை கொண்டிருப்பது
5 நாட்கள்
அநேக இருதயங்களை பயம் பிடித்து கொண்டிருக்கும் வேளையில் - இயேசுவை நம்பும் இதயங்களையும் - நாம் ஒரு முடிவை எடுக்கும் வேளையாக இது இருக்கிறது. நாம் நம்முடைய விசுவாசத்தில் தைரியமாக நிற்க, நம்மை சுற்றிலும் இருக்கும் மக்களுக்கு இயேசுவின் வெளிச்சத்தை பிரகாசிக்க நேரம் வந்துவிட்டது. 'Christianityworks’ Berni Dymet'-உடன் சேர்ந்து பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குள்ளாக ஒரு அமைதலான தைரியத்தை ஊத அவரோடு தேவனுடைய வார்த்தையை தியானியுங்கள்.
புதிய ஆண்டு: ஒரு புதிய தொடக்கம்
5 நாட்கள்
ஒரு புதிய ஆண்டு ஒரு புதிய தொடக்கத்திற்கும் புதிய ஆரம்பத்திற்கும் சமம். உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானவற்றை மீட்டமைக்கவும், புதுப்பிக்கவும் மற்றும் கவனம் செலுத்தவும் இது ஒரு நேரம். நீங்கள் இயேசுவின் மூலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை அறிந்துகொள்வதன் மூலம் சிறந்த ஆண்டைக் கொண்டிருப்பது தொடங்குகிறது. புத்தாண்டில் புதிதாக வாழ்க!
ஆறு நாட்களிள் கர்த்தரின் பெயர்கள்
6 நாட்கள்
தேவனின் பல நாமங்களில் இருந்து, அவருடைய குணாதிசயங்கள் மற்றும் அவரது இயல்புகளின் அம்சங்களை அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவிக்குப்புறமே, தேவனின் 80 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாமங்களை வேதாகமம் காண்பிக்கிறது. ஒரே உண்மையான தேவனிடம் நெருங்கி வர விசுவாசிக்கு உதவும் ஆறு பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும் இங்கே வழங்கப்பட்டுள்ளன. டாக்டர். டோனி எவன்ஸ் எழுதிய கடவுளின் நாமங்களின் வல்லமையை அனுபவிப்பது: ஜீவன் கொடுக்கும் பக்திக்குரியன. ஹார்வெஸ்ட் ஹவுஸ் பப்ளிஷர்ஸ், யூஜின், ஓரிகான் 2017.
போர்வீரன்
6 நாட்கள்
நம் அனைவருக்குள்ளும் வலுவான, எதற்கும் பணியாத, தைரியம் நிறைந்த ஒருவர் முக்கியமான காரணங்களுக்காக போராட தயாராக இருக்கிறார். லைப்.சர்ச் வழங்கும் இந்த வேதாகம திட்டம் போதகர். கிரெய்க் குரோஷெலின் போர்வீரன் என்னும் தொடரோடு இணைந்து உங்களை உங்கள் வாழ்வின் நோக்கத்தை கண்டறிந்து, தயக்கங்களை அகற்றி, காயங்களிலிருந்து குணமாகி, உங்களை சீர்படுத்தி வாழ்வில் ஒரு வெற்றியாளராக உங்களை உயர்த்த உதவும்.
தேவன் _______
6 நாட்கள்
தேவன் யார்? எப்படிபட்டவர்? என்று கேட்டால், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில்களை சொல்லுவோம். நமக்கே ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு பதில்கள் நம்முடைய எண்ணங்களில் தோன்றும். ஆனால், இவைகளில் எவை உண்மை, எவை உண்மை அல்லவென்று எப்படி அறிந்துகொள்ளுவோம்? நீங்கள் யாராய் இருந்தாலும், எப்படிப்பட்ட அனுபவத்தை உடையவராய் இருந்தாலும், எந்த திருச்சபையை சேர்ந்தவராக இருந்தாலும், தேவன் ஒருவர் இருக்கிறார், அவர் உங்கள் அருகில் இருக்கிறார், அவர் உங்களை சந்திக்க ஆவலுள்ளவராய் இருக்கிறார் என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதல்படியாக போதகர் கிரேக் க்ரோஷல் அவர்களுடைய 'தேவன் _______' என்கிறதான இந்த 6 நாள் வேத தியான திட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
தேவன் நம்மோடு
7 நாட்கள்
கிறிஸ்துமஸ் என்பது மிகுந்த மகிழ்ச்சியின் காலம், நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் பிறப்பைக் குறிக்கிறது. இயேசுவின் வருகையைப் பற்றி பைபிள் முழுவதும் பல தீர்க்கதரிசனங்கள் உள்ளன, இந்த தியானம் மூலம், தேவன் வருவதை அறிவிக்க வேதத்தில் தேவன் பயன்படுத்தும் ஏழு பெயர்களைப் பார்ப்போம். இந்த பெயர்களில் ஒவ்வொன்றையும் இயேசு எவ்வாறு உள்ளடக்குகிறார் என்பதையும், அவர் பூமியில் நடந்தபோது இன்றும் நமக்குப் பொருத்தமாக இருப்பதையும் ஆராய்வோம்.
தீர்க்கமான பிராத்தனைகள்
7 நாட்கள்
உங்கள் விசுவாசத்துடன் பாதுகாப்பாக விளையாடி களைப்படைந்து விட்டீர்களா? உங்கள் அச்சங்களை எதிர் கொள்ளவும், உங்கள் விசுவாசத்தை பேணிவளர்க்கவும், உங்கள் ஆற்றலை கட்டவிழ்த்து விடவும் நீங்கள் தயாரா? Life.Churchஇன் நல்லாயர் கிரேக் க்ரோஷெலின் புத்தகமான, அபாயகரமான பிராத்தனைகள், என்பதிலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஏழு நாள் பைபிள் திட்டம் உங்களை துணிகரமாக பிரார்த்திக்க ஊக்குவிக்கும்- ஏனெனில் இயேசுவை பின்பற்றுவது ஒரு போதும் பாதுகாப்புடையதாக இருக்க உத்தேசப்படவில்லை.
தைரியம்
1 வாரம்
தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்று கற்றுக்கொள்ளுங்கள். "தைரியம்" வாசிப்புத்திட்டம் விசுவாசிகளை அவர்கள் கிறிஸ்துவுக்குள் யார் என்றும் தேவனுடைய ராஜ்யத்தில் யார் என்றும் நினைவூட்டுவதன் மூலம் உற்சாகப்படுத்திகிறது. நாம் தேவனுடையவர்களாக இருக்கும் போது, நாம் அவரை நேரடியாக அணுக முடியும். தேவனுடைய குடும்பத்தில் உங்கள் இடம் பத்திரமாக இருக்கிறது என்று உறுதி பெற - மீண்டும் அல்லது முதல் முறையாக - படியுங்கள்.
ஜெபம்
21 நாட்கள்
எப்படி ஜெபிப்பது என்று பக்தர்களின் ஜெபங்களிலிருந்தும் இயேசுவின் சொந்த வார்த்தைகளிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கோரிக்கைகளை தேவனிடம் தினமும், தொடர்ந்து பொறுமையாக எடுத்து செல்வதில் உற்சாகம் கண்டடையுங்கள். காலியான சுய நீதி நிறைந்த ஜெபங்களுக்கும், சுத்த இருதயத்திலிருந்து வரும் தூய்மையான ஜெபங்களுக்கும் மாதிரிகளை காணுங்கள். தொடர்ந்து ஜெபியுங்கள்.