இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எபிரெயர் 12:29
பரிசு
5 நாட்கள்
இது ஆண்டின் மிக அற்புதமான நேரம், ஆனால் விடுமுறை நாட்கள் பொதுவாக நாம் கண்ணை மூடி திறப்பதற்குள் வேகமாக கடந்து செல்லும். இந்த கிறிஸ்மஸ் காலங்களில், நாம் வேதத்தை தியானிப்பதன் மூலம் நம் வாழ்வின் அதிசயங்களை மறுபடியும் மீட்டெடுக்க மற்றும் புதுப்பிக்க அழைக்கப்படுகிறோம். பாஸ்டர் கிரேக் க்ரோஷலின் தொடரான "பரிசு" உடன் வரும் இந்த 5-நாள் பைபிள் திட்டத்தில், ஞானிகள் இயேசுவுக்குக் கொடுத்த மூன்று பரிசுகள் எவ்வாறு நம்மை ஆச்சரியப்படுத்துவதற்கும், இயேசு கிறிஸ்துவை வழிபடுவதற்கும் வழிவகுக்கும் என்பதைக் கண்டுபிடிக்க இருக்கிறோம்.
ஆறு நாட்களிள் கர்த்தரின் பெயர்கள்
6 நாட்கள்
தேவனின் பல நாமங்களில் இருந்து, அவருடைய குணாதிசயங்கள் மற்றும் அவரது இயல்புகளின் அம்சங்களை அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவிக்குப்புறமே, தேவனின் 80 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாமங்களை வேதாகமம் காண்பிக்கிறது. ஒரே உண்மையான தேவனிடம் நெருங்கி வர விசுவாசிக்கு உதவும் ஆறு பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும் இங்கே வழங்கப்பட்டுள்ளன. டாக்டர். டோனி எவன்ஸ் எழுதிய கடவுளின் நாமங்களின் வல்லமையை அனுபவிப்பது: ஜீவன் கொடுக்கும் பக்திக்குரியன. ஹார்வெஸ்ட் ஹவுஸ் பப்ளிஷர்ஸ், யூஜின், ஓரிகான் 2017.
விசுவாசம் தளரும் போது: சந்தேகத்தின் நிழலில் தேவனைக் கண்டடைய 10 நாட்கள்
10 நாட்கள்
ஒருவர் விசுவாசத்தோடும் சந்தேகத்தோடும் போராடும்போது தனிமையாகவும் தனிமைப்படுத்தப்பட்டவராகவும் உணரக்கூடும். சிலர் மெளனமாக கஷ்டங்களை சகிக்கின்றனர், ஆனால் மற்றவர்களோ சந்தேகம் விசுவாசத்தோடு பொருந்தாது என்று நினைத்து விசுவாசத்தையே கைவிட்டுவிடுகின்றனர். டோமினிக் டன் என்பவர் இது மிகவும் கவலைக்குரியது என்றும் மிக தவறானது என்றும் நம்புகிறார். கேள்வி கேட்பது இயல்பானது மாத்திரம் அல்ல, ஒரு வளமான மற்றும் திடமான விசுவாசத்திற்கு வழிவகுக்கக் கூடியது என்றும் வேதாகமத்திலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் சுட்டிக் காட்டுகிறார். இந்த 10-நாள் வாசிப்புத்திட்டத்தில் விசுவாசம் மற்றும் சந்தேகத்தைப் பற்றி ஆராயுங்கள்.