வாசிப்புத் திட்டங்கள்

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எபிரெயர் 10:25

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

7 நாட்கள்

உக்கிராணத்துவம் என்கிற வார்த்தையை நினைக்கும் போது, நாம் அதை பணத்தோடு மட்டுமே சம்பந்தப்படுத்திப் பார்க்கிறோம். ஆனால் உக்கிராணத்துவம் என்ற வார்த்தைக்கு “நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டதை கவனமாக வைத்துக் கொள்ளுதல்” என்பதே அர்த்தம். இதில் பணமும் அடங்கும். இந்த வாழ்க்கையும் நம்மிடம் உள்ள அனைத்தும் நமக்கு சொந்தமானவை அல்ல, அவை கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்டவை, அவைகளைக் குறித்த கணக்கை நாம் கடவுளிடம் ஒப்புவிக்க வேண்டும் என்ற உண்மையை இந்த 7 நாட்கள் தியானத் திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப்போகிறோம். இதுவே வாழ்க்கையின் உக்கிராணத்துவம்.

தீவிர ஞானம்: தந்தைகளுக்கான 7-நாள் பயனம்

தீவிர ஞானம்: தந்தைகளுக்கான 7-நாள் பயனம்

7 நாட்கள்

தந்தைகள் நம்மை எவ்வளவு வடிவமைக்கின்றனர் என்பது மிகவும் வினோதமானது. உலகத்திற்குரிய தந்தையின் சக்தியையும் தாக்கத்தையும் விட்டு யாரும் தப்பிப்பதில்லை. மற்றும் பல ஆண்களும் தந்தையாக இருப்பதற்கு அவர்கள் தயாராகவில்லை என்று உணர்வதால் - வேதத்திலிருந்தும் பிற தந்தைளிடமிருந்தும், வழிநடத்துதல் பெறுவது அவசியம். தீவிர ஞானம் என்பது வேதத்திலுள்ள கொள்கைகளையும் ஞானத்தையும் தன்னுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட ஒரு வயதுமிக்க, ஞானமிக்க தந்தையின் அனுபவத்தோடு கலப்பதின் மூலம், ஞானம் மற்றும் தந்தைகளுக்கான ஆழ்ந்த அறிவு நோக்கிய ஒரு பயனமாகும்.

பரிசுத்த உணர்ச்சிகள் - ஒவ்வொரு சவாலுக்கும் வேதாகம பதில்கள்

பரிசுத்த உணர்ச்சிகள் - ஒவ்வொரு சவாலுக்கும் வேதாகம பதில்கள்

30 நாட்கள்

தேவன் உங்களைப் படைத்து, இந்த நேரத்தில் உங்களை உருவாக்கினார், அன்பில்லாதவர்களை நேசிக்கவும், கொந்தளிப்பில் அமைதியைப் பிரதிபலிக்கவும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் எதிர்மறையான மகிழ்ச்சியைக் காட்டவும். இது சாத்தியமற்றதாகத் தோன்றலாம், ஆனால் உங்கள் இயல்பான மனித உணர்ச்சிகளைப் பற்றியும் அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது என்றும் வேதாகமம் என்ன சொல்கிறது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம் இதைச் செய்யலாம். ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சாதாரண மற்றும் சில சமயங்களில் அசாதாரணமான சவால்களை இந்த தியானம் உள்ளடக்கியது, மேலும் உங்கள் உணர்ச்சிகளை தெய்வீக வழியில் எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றிய வேதகமாக் குறிப்புகளை வழங்குகிறது.