வாசிப்புத் திட்டங்கள்

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ஆதியாகமம் 3:19

ஆழமாக உருவாக்கப்பட்ட வாழ்க்கை

ஆழமாக உருவாக்கப்பட்ட வாழ்க்கை

5 நாட்கள்

நியூயார்க் போதகர் ரிச் வில்லோடாஸ் வரையறுப்பது போல, ஆழமாக உருவாக்கப்பட்ட வாழ்க்கை என்பது ஒருங்கிணைப்பு, குறுக்குச் சந்திப்பு, பின்னிப்பிணைப்பு மற்றும் இசைவு ஆகியவற்றால் குறிக்கப்பட்ட வாழ்க்கை, ஆன்மீக உருவாக்கத்தின் பல அடுக்குகளை ஒன்றாகப் பிடித்துக் கொள்கிறது. இந்த வகையான வாழ்க்கை, ஜெபத்தில் கடவுளுடன் வாழ்க்கையை வளர்த்துக் கொள்ளும், திரும்ப கட்டுத்தலை நோக்கி நகரும், நீதிக்காக உழைக்கும், ஆரோக்கியமான உள்ளார்ந்த வாழ்க்கையைக் கொண்ட, நம் உடல்களையும் பாலுணர்வையும் பணியாளருக்கு பரிசுகளாகக் காணும் மக்களாக நம்மை அழைக்கிறது.

தேவனுடைய நட்பை அனுபவித்தல்

தேவனுடைய நட்பை அனுபவித்தல்

5 நாட்கள்

நீரூற்றுக்காக ஏங்கும் வனாந்திரம் போல உங்கள் ஆத்துமாவில் உணர்கிறீர்களா? இந்த வனாந்திர காலம், தேவனுடைய பிரசன்னத்தை நீங்கள் இன்னும் நெருக்கமாகவும், அதிகாரபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் அனுபவிக்க உங்களுக்கு வாய்ப்பளித்து, உங்களுக்கு நம்பிக்கையூட்டும் காலமாகவும் இருக்கக்கூடும். இந்த வனாந்திர அனுபவத்தில், உங்கள் வாழ்க்கை எள்ளவும் நகராதது போல உங்களுக்கு ஒருவேளை தோன்றலாம். ஆனால் இந்த காலம் உங்களுடைய வாழ்வில் வீணாக்கப்பட்ட காலம் அல்ல என்பதை நீங்கள் உணரும்படி இந்த தியானம் உங்களை உற்சாகப்படுத்தும். நீங்கள் எப்படிப்பட்ட கடினமான பாதையில் பயணித்துக் கொண்டிருந்தாலும், நீங்கள் தனியாக பயணிக்கவில்லை என்று அறிந்துகொள்ளுங்கள். காரணம், உங்கள் தேவனாகிய கர்த்தர், ஜீவனளிப்பவராகவும், ஆறுதலளிப்பவராகவும், ஒரு நல்ல நண்பனாகவும் எப்பொழுதும் உங்களுடனே இருக்கிறார்.

தேவன் _______

தேவன் _______

6 நாட்கள்

தேவன் யார்? எப்படிபட்டவர்? என்று கேட்டால், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில்களை சொல்லுவோம். நமக்கே ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு பதில்கள் நம்முடைய எண்ணங்களில் தோன்றும். ஆனால், இவைகளில் எவை உண்மை, எவை உண்மை அல்லவென்று எப்படி அறிந்துகொள்ளுவோம்? நீங்கள் யாராய் இருந்தாலும், எப்படிப்பட்ட அனுபவத்தை உடையவராய் இருந்தாலும், எந்த திருச்சபையை சேர்ந்தவராக இருந்தாலும், தேவன் ஒருவர் இருக்கிறார், அவர் உங்கள் அருகில் இருக்கிறார், அவர் உங்களை சந்திக்க ஆவலுள்ளவராய் இருக்கிறார் என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதல்படியாக போதகர் கிரேக் க்ரோஷல் அவர்களுடைய 'தேவன் _______' என்கிறதான இந்த 6 நாள் வேத தியான திட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

காலத்தால் அழியாத அதிசயம் | நியூ லைஃப் ஆலயத்திலிருந்து ஒரு கிறிஸ்துமஸ் வாசிப்பு திட்டம்

காலத்தால் அழியாத அதிசயம் | நியூ லைஃப் ஆலயத்திலிருந்து ஒரு கிறிஸ்துமஸ் வாசிப்பு திட்டம்

19 நாட்கள்

இந்த மூன்று வாரத் திட்டம், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக நமக்காக எப்படி வந்தார் என்ற காலவரம்பற்ற அதிசயத்தின் மூலம் நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தத் திட்டம் திங்கட்கிழமை தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் ஒவ்வொரு வார இறுதியில் விடுமுறைக் காலத்தில் ஓய்வு மற்றும் பிரதிபலிப்புக்கான குறுகிய உள்ளடக்கம் இருக்கும். கிறிஸ்துவின் பிறப்பு நமது எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்திற்கான அர்த்தம் என்ன என்பதைப் படிக்கும்படி எங்களுடன் சேருங்கள்.