இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எபேசியர் 6:13
ஆவிக்குரிய யுத்தத்திற்கான திட்டம்
5 நாட்கள்
இந்த சக்திவாய்ந்த போதனைகள் மூலம், எதிரிகளை முந்திக்கொண்டு தோற்கடிப்பதற்கான ஒரு தந்திரத்தினை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய ஆழமான புரிதலை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள், மேலும் உங்கள் வாழ்க்கையை அழிப்பதற்கான அவனது திட்டத்தை முறியடிப்பீர்கள்.
திருமணம் என்னும் இராஜ்ஜியம்
5 நாட்கள்
திருமணம் என்பது மிகுந்த சந்தோஷங்களுடனும் பெரும் சவால்களுடனும் வருகிறது. இதற்கு பெரும்பான்மையான காரணம் நமது திருமணத்தின் தேவ சித்தத்தை மறந்ததே. நமது திருமணத்தில் நாம் தேவனை நீக்கிவிட்டு அதை மகிழ்ச்சியின் அடிப்படையில் வரையறுத்துள்ளோம். ஆனால் உண்மை என்னவென்றால், உலகம் முழுவதும் தேவனின் எல்லையை விரிவுபடுத்துவதன் மூலம் அவரை மகிமைப்படுத்த திருமணம் உள்ளது. இந்த ஐந்து நாள் வாசிப்புத் திட்டத்தில், டாக்டர் டோனி எவன்ஸ் உங்களை திருமணம் என்னும் இராஜ்ஜியப் பயணத்திற்குள் அழைத்துச் செல்வார்.
தேவனுடைய சர்வாயுதவர்க்கம்
5 நாட்கள்
தினந்தோறும், முழுநேரமும் உங்களை சூழ்ந்தபடி - கண்ணுக்கு புலனாகாத, கேள்விப்படாத, ஆனாலும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உணரக்கூடிய ஒரு போர் சீற்றமடைகிறது. மிக அர்பணிப்புமிக்க, அந்தகாரமான சத்துரு ஒருவன் உங்களுக்கு முக்கியமென்று இருக்கும்: உங்கள் இருதயம், உங்கள் சிந்தனை, உங்கள் மணவாழ்க்கை, உங்கள் குழந்தைகள், உங்கள் உறவுகள், உங்கள் எதிர்ப்புத்திறன், உங்கள் கனவுகள், உங்கள் விதி போன்ற எல்லாவற்றிலும் அழிவை ஏற்படுத்த வகைதேடுகிறான். இருப்பினும் அவனுடைய போர்த்திட்டம் உங்களை நிராயுதபாணியாக எதிர்பாராதநிலையில் பிடிப்பதை சார்ந்துள்ளது. நீங்கள் அங்குமிங்குமாக தள்ளப்படுவதால் சோர்ந்தும் உங்கள் பாதுகாப்பு இல்லாமலும் பிடிபடுகிறீர்களென்றால், இந்த தியானம் உங்களுக்கானது. சத்துருவானவன் தருணத்திற்கேற்றபடி உடையணிந்த ஒரு பெண்ணை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் பரிதாபமாக தோற்றுப்போகிறான். தேவனுடைய சர்வாயுதவர்க்கம், ஒரு விசுவாசியின் இருப்புகளின் வேதவிளக்கம் என்பதிலும் மேலாக, அதை உடுத்திக்கொண்டு தனித்த்துவமான போர்த் தந்திரங்களை உருவாக்கி ஜெயத்தை சுதந்தரித்துக்கொள்ள உதவும் ஒரு செயல் திட்டமாகும்.
தேவ இராஜ்ஜியத்தின் வழிகள்
5 நாட்கள்
தேவன் தமது திருச்சபையை எழுப்புகிறார், எழுப்பதலை ஊற்றுகிறார். நாம் விரிந்த மனப்பான்மையோடு அதனை நோக்க வேண்டும். இது போன்ற கடினமான நேரங்களில், தப்பித்து விட ஆசைப்படுவோம். இருப்பினும், இது விலகி ஓடுவதற்கான நேரம் அல்ல. நாம் இருக்கும் காலத்தை புரிந்து, இக்காலத்தில் தேவ ராஜ்யத்தை எவ்வாறு நிலைநிறுத்துவதில் எப்படி முன்னேறலாம் என்பதற்கான உத்திகளைப் பெறுவதற்கு எங்களுடன் இணையுங்கள்.
வாழ்க்கை மாற்றப்பட்டது: கிறிஸ்துமஸில்
5 நாட்கள்
எல்லா விடுமுறை சலசலப்புகளிலும், நாம் ஏன் கொண்டாடுகிறோம் என்பதை எளிதாகப் பார்க்க முடியாது. இந்த 5-நாள் வருகைத் திட்டத்தில், இயேசுவின் பிறப்பால் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் எதிர்காலத்திற்கான நம்பிக்கை ஆகியவற்றில் நாம் மூழ்குவோம். தேவன் யார் என்பதைப் பற்றி மேலும் அறியும்போது, நம்பிக்கை, நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் அமைதியுடன் விடுமுறைக் காலத்தில் வாழ்வது எப்படி என்பதைக் கண்டுபிடிப்போம்.
வாழ்க்கை மாற்றப்பட்டது: அடையாளத்தைத் தழுவுதல்
6 நாட்கள்
நாம் யாராக இருக்க வேண்டும் என பல குரல்கள் சொல்கையில், நமது அடையாளத்தை குறித்து நாம் போராடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தேவன் நமது வேலையை வைத்தோ, திருமணம் ஆனவரா இல்லையா என்பதைக் கொண்டோ, நமது தவறுகளைக் கொண்டோ நம்மை வரையறுக்க விரும்பவில்லை. நம் வாழ்வில் அவருடைய கருத்தே உயரிய அதிகாரம் இருக்க வேண்டும் என கர்த்தர் விரும்புகிறார். இந்த ஆறு நாள் திட்டம் வேதம் நீங்கள் யார் என்று சொல்கிறது என்பதை புரிந்து கொள்ளவும் அதை தழுவிக் கொள்ளவும் உதவும்.
தேவனின் சர்வாயுத வர்க்கம்
6 நாட்களில்
"தேவனின் சர்வாயுத வர்க்கம் எபே 6:10-18 இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, ஆன்மீகத் தயார்நிலைக்கான ஒரு சக்திவாய்ந்த உருவகக் கட்டமைப்பாகும். ஆன்மீக சவால்களை எதிர்கொள்ள விசுவாசிகள் தினசரி செய்ய வேண்டிய அத்தியாவசிய கூறுகளை இது குறிக்கிறது. ஒவ்வொரு பகுதியும் - சத்தியம் என்னும் அரைக்கச்சை, நீதி என்னும் மார்க்கவசம், சமாதானத்தின் நற்செய்தியின் பாதரட்சை, விசுவாசம் என்னும் கேடகம், இரட்சிப்பு என்னும் தலைச்சீரா மற்றும் தேவ வசனம் என்னும் பட்டயம் - தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆயுதங்களாகச் செயல்படுகின்றன. சிக்கலான உலகில் நம்பிக்கை மற்றும் கண்ணுக்குத் தெரியாத யுத்தங்களுக்கு தனிநபர்களை ஆயத்தப்படுத்துகின்றன.
தேடல்
7 நாட்கள்
இந்த 7- நாள் வாசிப்பு திட்டத்தின் மூலம், பெத் மோர் என்பவர் வேதத்தின் கேள்விகள் வாயிலாக நம்மை நன்கு அறிந்த நமது ஆண்டவரிடம் நெருங்க செய்வார். ஒரு வாக்கியத்தின் முடிவில் வளைந்த கேள்விக் குறியீடு ஆர்வம் மற்றும் சந்தேகத்தைக் கூட சிலசமயம் குறிக்கும். ஒரு கேள்வி என்பது பலவீனத்தில் அல்லது பாதிப்பில் இருந்து நெருக்கத்தை குறித்த அழைப்பாகும். அத்தகைய அழைப்பிலிருந்து வேதாகமும் விலகவில்லை. தேவனுடைய மக்கள் தங்கள் படைப்பாளரைப் பற்றிய கேள்விகளைக் கேட்பதை மீண்டும் மீண்டும் காண்கிறோம். அண்டசராசரத்தின் கர்த்தரும் தம்முடைய படைப்பைப் பற்றிய கேள்விகளை எழுப்புவதையும் நாம் காண்கிறோம். அழைப்பை ஏற்றுக்கொள்வது தேடலின் ஒரு சவால். வார்த்தைக்குள் தோண்டி எடுக்கவும், கர்த்தரின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், உங்கள் கேள்விகளை அவர் முன் கொண்டு வரவும் கற்றுக்கொள்ளுங்கள். வளைந்த நிறுத்தற் குறியீடு உங்களை தந்தையுடனான நெருக்கமான உறவுக்கு சுட்டிக்காட்டும் வரைபடமாக இருக்கட்டும்.
இயேசு: நம் ஜெயக்கொடி
7 நாட்கள்
நாம் உயிர்த்தெழுதலின் பண்டிகையை கொண்டாடும்போது, நாம் வரலாற்றின் மிகவும் மேன்மையான வெற்றியையே கொண்டாடுகிறோம். இயேசுவானவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, அவர் பாவம் மற்றும் பாதாளத்தையும், மற்றும் அவற்றின் எல்லா பின்விளைவுகளையும் நித்தியமாக தோற்கடித்தார், மேலும் அந்த ஜெயத்தை நம்முடன் பகிரவும் முடிவுசெய்தார். இந்த ஈஸ்டர் வாரத்தில், அவர் வெற்றி சிறந்து கைப்பற்றிய அரண்களைப் பற்றி சிந்திப்பதில் மூழ்குவோம், அவர் நமக்காக செய்த யுத்தத்தை நினைவுகூறுவோம், மற்றும் அவரை நமது ஜெயக் கொடியாக ஸ்தோத்தரிப்போம்.
வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்
7 நாட்கள்
வனாந்தர அனுபவமானது நம்மைத் தொலைந்து போனவர்களாக, கைவிடப்பட்டவர்களாக, உதவியற்றவர்களாக உணரச்செய்யும் ஒரு காலமாகும். ஆனாலும் வனாந்தர அனுபவத்தில் இருக்கும் சுவாரசியமான தன்மை என்ன என்றால், இது நம் கண்ணோட்டத்தை மாற்றக்கூடியது. வாழ்வை மாற்றமடையச் செய்வது. விசுவாசத்தை உருவாக்கும் தன்மையுடையது. இந்த வாசிப்புத்திட்டத்தை நீங்கள் படிக்கும்போது வனாந்தரத்தை வெறுக்காமல் அதைத் தழுவிக் கொண்டு கர்த்தர் உங்களில் தனது சிறப்பானதைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதுவே எனது ஜெபமாகும்.
வேதாகம ஞானத்துடன் தலைமையை அளவிடுதல்
8 நாட்கள்
நமது தலைமையை உயர்த்துவது இன்று முக்கியமானது. நமது மாறிவரும் சூழலை வழிநடத்தும் நமது தலைமைத் திறனை நாம் விரிவுபடுத்த வேண்டும், பெரிதாக்க வேண்டும், அதிகரிக்க வேண்டும், வளர்க்க வேண்டும். வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம், ஊழியர் / குழு இயக்கவியலை மாற்றுதல் மற்றும் மாறிவரும் பொருளாதாரம் ஆகியவை நாம் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள். ஆனால் நமது தலைமையை அளவிடுவது பணியிடத்திற்கானது என்று நினைக்கவேண்டாம். வீட்டிலும் நமது உறவுகளிலும் நமது தலைமையை நாம் அளவிட வேண்டும். நடைமுறை, தொடர்புடைய தலைமை நுண்ணறிவு பெற இன்று ஆராய்வோம்.
விசுவாசம்
12 நாட்கள்
காண்பது நம்பிக்கையா? அல்லது நம்பிக்கை காண்பதா? இவை விசுவாசத்தைக் குறித்த கேள்விகள். இந்தத் திட்டம் விசுவாசத்தைக் குறித்த ஆழ்ந்த ஆய்வாகும் - பழைய ஏற்பாட்டிலிருந்து உண்மை தைரியமுள்ள விசுவாசத்தை அசாத்தியமான சூழ்நிலைகளில் நிரூபித்தவர்களின் நிகழ்வுகள் முதற்கொண்டு விசுவாசத்தைப் பற்றிய இயேசுவின் உபதேசங்களும் இதில் அடங்கும். உங்கள் வாசிப்புகளின் மூலம் கர்த்தருடனான உங்கள் உறவை ஆழமாக்கி இயேசுவின் அதிக விசுவாசமுள்ள தொண்டராக ஆகும்படி ஊக்குவிக்கப்படுவீர்கள்.
எபேசியர்
28 நாட்கள்
கடவுள் தம் குழந்தைகளுக்கு என்ன விரும்புகிறார் என்ற அழகான உயரத்திலிருந்து, எபேசியர்களுக்கு எழுதிய கடிதம் கடவுளின் கிருபையிலும், அமைதியிலும், அன்பிலும் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் எபேசியர்ஸ் வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
தைரியமான குழந்தைகள்
28 நாட்கள்
தைரியத்தை வெளிப்படுத்திய அற்புதமான மனிதர்களின் உதாரணங்களால் பைபிள் நிரம்பியுள்ளது. ஆனால் ஒரு குழந்தை தனது சாதாரண வாழ்க்கையில் அசாதாரண தைரியத்துடன் வாழ முடியுமா? இந்தத் திட்டத்தில் சில பைபிள் பெரியவர்களின் குழந்தைகளுக்கு ஏற்ற சில வீடியோக்கள் உள்ளன, மேலும் கிறிஸ்துவுடன் நம் அன்றாட நடைப்பயணத்தில் தைரியமாக வாழ்வதற்கு சவால் விடும் பிற வசனங்கள் மற்றும் பத்திகளை ஆராய்வதன் மூலம் அவர்களின் தைரியமான கதைகள் மூலம் நம்மை அழைத்துச் செல்கிறது.