இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1 பேதுரு 5:6
கர்த்தர் செய்த எல்லாவற்றையும் நினைவுகூரல்
5 நாட்கள்
எதிர்காலத்தைக் குறித்தே எண்ணிக்கொண்டிருப்பது நமது இயற்கை சுபாவமாக இருந்தாலும் கடந்த காலத்தை மறந்து விடக்கூடாது. இந்த திட்டம் ஐந்து நாட்களில் உங்களை இன்றைய நிலைமைக்கு உருவாக்கின கர்த்தரின் செயல்களை நினைவுகூரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு வேதபகுதியும் ஒரு சுருக்கமான தியானமும் கிறிஸ்துவுடனான உங்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை உங்களுக்கு நினைத்துப் பார்க்க உதவும்.
பணிவிற்கு 5 பிரார்த்தனைகள்
5 நாட்கள்
இறைவனின் கிருபை, தயவு, ஆசீர்வாதம் மேலும் தேவையா? அப்படி என்றால் இறைவனின் தயவு கோரி உங்களுக்கு உதவுமாறு இந்த எளிமையான பணிவிற்கான 5 பிரார்த்தனைகளை ஜெபியுங்கள். உங்கள் பிரார்த்தனைக்கு அவர் பதிலளிப்பார்; பணிவானவர்களுக்கு அவர் கிருபை அளிப்பார்! தேவனின் முன்பில் நீங்கள் பணிந்தீர்கள் என்றால், உங்களைத் தூக்கி நிறுத்துவார்.
உங்களுக்காக இங்கே காத்திருக்கிறேன், விசுவாசத்திற்கான ஒரு வருகையின் பயணம்
7 நாட்கள்
வருகை என்பது எதிர்பார்ப்புடனும் ஆயத்ததுடனும் காத்திருக்கும் காலமாகும். நீங்கள் கர்த்தரை நோக்கி காத்திருக்கும் போது உங்கள் காத்திருப்பு வீண் போகாது என்பதைக் கண்டறிய ஒரு வருகையின் பயணத்தில் போதகரும் எழுத்தாளருமான லூயி கிக்லியோவுடன் இணையுங்கள். இத்திட்டத்தின் கீழ் உள்ள வருகையின் பயணத்தின் மூலம் பரந்த விசுவாசத்தை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பைப் பற்றிக் கொள்ளுங்கள். அடுத்த ஏழு நாட்களில் உங்கள் ஆத்துமாவுக்கு அமைதியையும் ஊக்கத்தையும் இந்த வருகையின் நாட்களுக்கான எதிர்பார்ப்பின் காலங்களில் கண்டுணருங்கள்!
இயேசு என்னை நேசிக்கிறார்
7 நாட்கள்
யாரோ ஒருவர், "நான் கிறிஸ்தவனாயிருப்பதற்கு எதை விசுவாசிக்க வேண்டும்?" என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? "இயேசு என்னை நேசிக்கிறார், இதை நான் அறிவேன், ஏனெனில் வேதாகமம் அவ்வாறு சொல்லுகிறது”, என்ற நேசிக்கப்படுகிற பாடலின் வரிகளைக் கொண்டு எதை விசுவாசிக்க வேண்டும் ஏன் என்று பத்திரிக்கையாளராய் இருந்து போதகரானவர் விளக்குகிறார். சிறந்த ஆசிரியர் ஜான் எஸ், டிக்கர்சன் அவசியமான கிறிஸ்தவ நம்பிக்கைகளையும் அவை எதனால் முக்கியம் என்பதை உண்மையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.