இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1 யோவான் 4:19
தேவனிடம் திரும்பும் வழியை கண்டறிதல்
5 நாட்கள்
வாழ்க்கையில் இன்னும் அதிகமாக எதிர்ப்பார்க்கிறீர்களா? தேவனுடன் உள்ள உங்கள் உறவு எங்கு இருந்தாலும், இன்னும் அதிகமாக வேண்டும் என்ற உணர்வு தேவனிடம் திரும்புவதற்கான ஏக்கம் தான். நாம் தேவனிடம் திரும்பும் வழியை கண்டறிகையில், நாம் அனைவரும் மைல் கற்கள் அல்லது விழிப்புணர்வுகளை சந்திக்கிறோம். இந்த விழிப்புணர்வுகள் ஒவ்வொன்றன் வழியாகவும் பயணம் செய்து, நீங்கள் இப்போது இருப்பதற்கும் நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பும் இடத்திற்கும் உள்ள இடைவெளியை நிரப்புங்கள். நாம் தேவனை கண்டடைய விரும்புகிறோம், அவர் கண்டடையப்பட இன்னும் அதிகமாக விரும்புகிறார்.
உறுதிமொழி
6 நாட்கள்
இந்த லயிஃப் சபையின் வேதாகம திட்டத்தில், ஆறு தம்பதியினர் சபையில் அதிகாரப்பூர்வமாக சொல்லாத ஆறு திருமண உறுதிமொழிகளைப் பற்றி எழுதுகிறார்கள். ஆயத்தம், முன்னுரிமை, பின்தொடர்தல், ஒற்றுமை, தூய்மை மற்றும் பிரார்த்தனை ஆகிய இந்த உறுதிமொழிகளே திருமணத்திற்கு முன்பே திருமணங்களை நிலைக்க செய்கின்றன. நீங்கள் திருமணமானவராக இருந்தாலும் சரி அல்லது அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பவராக இருந்தாலும் சரி, உறுதிமொழி எடுக்க வேண்டிய நேரம் இது
இயேசு: நம் ஜெயக்கொடி
7 நாட்கள்
நாம் உயிர்த்தெழுதலின் பண்டிகையை கொண்டாடும்போது, நாம் வரலாற்றின் மிகவும் மேன்மையான வெற்றியையே கொண்டாடுகிறோம். இயேசுவானவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, அவர் பாவம் மற்றும் பாதாளத்தையும், மற்றும் அவற்றின் எல்லா பின்விளைவுகளையும் நித்தியமாக தோற்கடித்தார், மேலும் அந்த ஜெயத்தை நம்முடன் பகிரவும் முடிவுசெய்தார். இந்த ஈஸ்டர் வாரத்தில், அவர் வெற்றி சிறந்து கைப்பற்றிய அரண்களைப் பற்றி சிந்திப்பதில் மூழ்குவோம், அவர் நமக்காக செய்த யுத்தத்தை நினைவுகூறுவோம், மற்றும் அவரை நமது ஜெயக் கொடியாக ஸ்தோத்தரிப்போம்.
தைரியம்
1 வாரம்
தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்று கற்றுக்கொள்ளுங்கள். "தைரியம்" வாசிப்புத்திட்டம் விசுவாசிகளை அவர்கள் கிறிஸ்துவுக்குள் யார் என்றும் தேவனுடைய ராஜ்யத்தில் யார் என்றும் நினைவூட்டுவதன் மூலம் உற்சாகப்படுத்திகிறது. நாம் தேவனுடையவர்களாக இருக்கும் போது, நாம் அவரை நேரடியாக அணுக முடியும். தேவனுடைய குடும்பத்தில் உங்கள் இடம் பத்திரமாக இருக்கிறது என்று உறுதி பெற - மீண்டும் அல்லது முதல் முறையாக - படியுங்கள்.
1 யோவான்
25 நாட்கள்
ஜானின் இந்த முதல் கடிதத்தில் நடுநிலை எதுவும் இல்லை - ஒன்று நாம் ஒளி அல்லது இருளை, உண்மைக்கு பொய், அன்பு அல்லது வெறுப்பைத் தேர்வு செய்கிறோம்; நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்புவது அல்லது மறுப்பது போல, ஒன்றை அல்லது மற்றொன்றைத் தழுவுகிறோம். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் 1 ஜான் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.