இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1 கொரிந்தியர் 13:4
நேசியுங்கள், தொடர்ந்து நேசியுங்கள்
3 நாட்கள்
அன்பை கொண்டாடுவது என்பது ஒரு குறிப்பிட்ட தேதிக்கு அப்பாற்பட்டது; கடவுளின் அன்பு குணப்படுத்தவும், மீட்டெடுக்கவும், அவருடைய நன்மையை அறிவிக்கும் ஒரு வாழ்க்கையை நமக்கு வழங்கவும் வந்தது என்பதைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு நினைவூட்டும் வாழ்க்கை அது. அன்பு எதைப் பிரதிபலிக்கிறது மற்றும் கடவுள் விரும்புவதைப் போல மற்றவர்களை நேசிப்பது எப்படி இருக்கும் என்று மூன்று நாள் ஆய்வுக்கு செல்ல உங்களை அழைக்கிறேன்.
இரக்கத்தின் தேவன் - இயேசுவைப் போல நேசிக்க கற்றல்
4 நாட்கள்
கிறிஸ்துவைப் போல தேவனின் அன்பு மற்றும் இரக்கத்தின் ஒரு வழியாக நீங்கள் எப்படி மாறலாம் என்பதைக் கண்டறியுங்கள் - அவரின் இரக்கம் ஒருபோதும் தோல்வியடையாது.
விதைகள்: என்ன மற்றும் ஏன்
4 நாட்கள்
விதைகள், அவை எல்லா இடங்களிலும் உள்ளன. உங்கள் வார்த்தைகள், உங்கள் பணம், உங்கள் குழந்தைகள் மற்றும் நீங்கள், நீங்களே ஒரு விதை! இந்த விதைகள் எப்படி வேலை செய்கின்றன, அது நமக்கு ஏன் முக்கியம்? பைபிள் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம், மேலும் அது எவ்வாறு நம் வாழ்வில் பொருந்துகிறது என்பதைக் கண்டுபிடிப்போம், அது நம்மை கடவுளிடமும் அவருடைய நோக்கத்துடனும் நெருக்கமாகக் கொண்டுவருகிறது.
அன்பும் திருமணமும்
5 நாட்கள்
நமது திருமண வாழ்வை வேதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கர்த்தர் தாமே நமது உறவைக் குறித்த புதிய கருத்துகளை நமக்கு வெளிப்படுத்தவும் நமது உறவை பலப்படுத்தவும் ஏதுவாகிறது. இந்த அன்பும் திருமணமும் வாசிப்புத் திட்டமானது சம்பந்தப்பட்ட வேதபகுதி மூலமாக தினமும் துரிதமாக நம் துணைவருடன் கலந்தாலோசித்து ஜெபம் செய்யும்படியான எண்ணங்களைத் தூண்டி விடுகிறது. இந்த ஐந்து நாள் திட்டம் வாழ்நாள் முழுமைக்கான உங்கள் உறவின் பொறுப்புணர்வை செயல்படுத்த உதவும் ஒரு சுருக்கமான திட்டமாகும்.
நம்மை புண்படுத்தியவரை மன்னிப்பது
7 நாட்கள்
நாம் உணர்ச்சி அல்லது உடல் ரீதியான காயங்களால் அல்லல் பட்டாலும், மன்னிப்பதே கிறிஸ்தவ வாழ்க்கையின் மூலக்கல்லாகும். இயேசு கிறிஸ்து அனைத்து வகையான அநியாயங்கள் மற்றும் அநீதிகளை அனுபவித்தார், அதுவும் நேர்மைகேடான மரணம் வரையும். ஆயினும், அவரது இறுதி நேரத்தில் மற்ற சிலுவையில் கேலி செய்த திருடனையும், அவரது வதகன்களையும் மன்னித்தார்.
இவைகளில் அன்பே பிரதானம்
26 நாட்கள்
கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார்.
BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்
28 நாட்கள்
தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.