Logotip YouVersion
Search Icon

ஆதியாகமம் 5

5
ஆதாமிலிருந்து நோவா வரையுள்ள வம்சவரலாறு
1ஆதாமின் வம்சவரலாறு இதுவே:
இறைவன் மனிதரைப் படைத்தபோது, அவனை இறைவனின் சாயலிலேயே உண்டாக்கினார். 2அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அவர் அவர்களைப் படைத்தபோது அவர்களை, “மனிதர்#5:2 மனிதர் என்பது எபிரெயத்தில் ஆதாம்” என்று அழைத்தார்.
3ஆதாம் 130 வருடங்கள் வாழ்ந்தபின், ஆதாமுக்கு தன்னுடைய சாயலிலும், தன்னுடைய உருவிலும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு “சேத்” என்று பெயரிட்டான். 4சேத் பிறந்தபின் ஆதாம் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். 5ஆதாம் மொத்தம் 930 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
6சேத் தனது 105 வயதில் ஏனோஸுக்குத் தகப்பனானான். 7சேத் ஏனோஸைப் பெற்றபின் 807 வருடங்கள் வாழ்ந்து இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். 8சேத் மொத்தம் 912 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
9ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான். 10கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். 11ஏனோஸ் மொத்தம் 905 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
12கேனான் தனது 70 வயதில் மகலாலெயேலுக்குத் தகப்பனானான். 13மகலாலெயேல் பிறந்த பிறகு, கேனான் 840 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். 14கேனான் மொத்தம் 910 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
15மகலாலெயேல் தனது 65 வயதில் யாரேத்திற்குத் தகப்பனானான். 16யாரேத் பிறந்த பிறகு மகலாலெயேல் 830 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். 17மகலாலெயேல் மொத்தம் 895 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
18யாரேத் தனது 162 வயதில் ஏனோக்குக்குத் தகப்பனானான். 19ஏனோக்கு பிறந்த பிறகு யாரேத் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். 20யாரேத் மொத்தம் 962 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
21ஏனோக்கு தனது 65 வயதில் மெத்தூசலாவுக்குத் தகப்பனானான். 22மெத்தூசலா பிறந்த பிறகு ஏனோக்கு 300 வருடங்கள் இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான். அவன் இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். 23ஏனோக்கு மொத்தம் 365 வருடங்கள் வாழ்ந்தான். 24ஏனோக்கு இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான்; இறைவன் அவனை எடுத்துக்கொண்டதனால், அதன்பின் அவன் காணப்படவில்லை.
25மெத்தூசலா தனது 187 வயதில் லாமேக்குக்குத் தகப்பனானான். 26லாமேக்கு பிறந்த பிறகு மெத்தூசலா 782 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். 27மெத்தூசலா மொத்தம் 969 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
28லாமேக்கு தனது 182 வயதில் ஒரு மகனுக்குத் தகப்பனானான். 29அவன், “யெகோவா சபித்த நிலத்தில் நாம் பாடுபட்டு உழைக்கும்போது, இவன் நமக்கு ஆறுதலாயிருப்பான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான். 30நோவா பிறந்த பிறகு, லாமேக்கு 595 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். 31லாமேக்கு மொத்தம் 777 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
32நோவாவுக்கு 500 வயதான பின்பு சேம், காம், யாப்பேத் என்னும் மகன்களுக்குத் தகப்பனானான்.

Označeno

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in