1
லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:23
பரிசுத்த பைபிள்
தொடர்ந்து அவர்களிடம் இயேசு, “என்னைப் பின்பற்றிவர யாரேனும் விரும்பினால், அவன் தனக்கு விருப்பமான செயல்களுக்கு மறுப்புச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் துயரங்களை ஏற்றுக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும்.
Primerjaj
Explore லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:23
2
லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:24
தனது உயிரைக் காப்பாற்ற விரும்பும் மனிதன் அதை இழந்துபோவான். தனது உயிரை எனக்காகக் கொடுக்கிற ஒவ்வொரு மனிதனும் அதைக் காப்பாற்றிக்கொள்வான்.
Explore லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:24
3
லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:62
இயேசு, “ஒருவன் வயலை உழ ஆரம்பித்துப் பின்னோக்கி பார்த்தால் அவன் தேவனின் இராஜ்யத்துக்குத் தன்னை ஆயத்தப்படுத்தாதவன் ஆவான்” என்றார்.
Explore லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:62
4
லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:25
ஒருவன் அழிந்துபோன நிலையில் இருந்தால் உலகம் முழுவதும் அவனுடையதாக இருந்தாலும் அதனால் எந்தப் பயனுமில்லை.
Explore லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:25
5
லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:26
ஒருவன் என்னைக் குறித்தோ, அல்லது என் போதனையைக் குறித்தோ வெட்கப்பட்டால், நான் எனது மகிமையோடும், பிதாவின் மகிமையோடும், தேவ தூதர்களின் மகிமையோடும் வருகைதரும்போது அவனைக் குறித்து வெட்கப்படுவேன்.
Explore லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:26
6
லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:58
இயேசு பதிலாக, “நரிகள் வசிப்பதற்குக் குழிகள் உண்டு. பறவைகள் வசிப்பதற்குக் கூடுகள் உண்டு. ஆனால் மனித குமாரன் தனது தலையைச் சாய்ப்பதற்குக் கூட எந்த இடமும் இல்லை” என்று கூறினார்.
Explore லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:58
7
லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:48
பின்பு தனது சீஷர்களை நோக்கி, “என் பெயரினால் ஒருவன் ஒரு சிறிய குழந்தையை இதுபோல ஏற்றுக்கொண்டால் அவன் என்னையும் ஏற்றுக்கொள்கிறான். என்னை ஏற்றுக்கொள்ளும்போது அம்மனிதன் என்னை அனுப்பினவரை (தேவனையும்) ஏற்றுக்கொள்கிறான். உங்களில் மிகவும் தாழ்மையுள்ள மனிதன் எவனோ, அவனே மிகவும் முக்கியமான மனிதன் ஆவான்” என்றார்.
Explore லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:48
Domov
Sveto pismo
Bralni načrti
Videoposnetki