YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 3 OF 100

சாத்தானின் அரண்கள்

“அரண்” - என்று சொல்வது - சாத்தான் நம்முடைய வாழ்க்கையின் எந்த பகுதியிலாகிலும் நம்மை சிறைப்படுத்தி, கட்டுக்குள் வைப்பதையே குறிக்கும். நாம் கேள்விப்பட்டிருக்கும் பொய்களையே யோசித்துக் கொண்டிருப்பதின் விளைவாக, அவன் இதை நடப்பிக்கிறான். உண்மை யில்லாதவைகளையே நாம் நம்பிக்கொண்டிருக்கும் வரைக்கும், அவனுடைய அரண்களுக்குள்தான் நாம் சிறைப்பட்டிருப்போம். இவைகளிலிருந்து விடுதலையை அனுபவிக்க, நாம் தேவ பெலனுள்ள ஆயுதங்களை பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மனதின் போர்களம் என்ற என்னுடைய புத்தகத்திலே, தனது தந்தையினால் தவறாக நடத்தப்பட்டு, மூளையை சலவை செய்து தன்னுடைய டீன் ஏஜ் பருவம் அடையும் போது, ஆண்களையே நம்பக்கூடாது என முடிவு செய்த, மேரி என்னும் பெண்ணைக் குறித்து சுட்டிக்காட்டியிருக்கிறேன். அவளுக்கும், அவளுடைய கணவருக்கும் இடையே குடும்பத்தில் பல சண்டைகள் ஏற்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லையே! பல ஆண்டுகளாகவே, சாத்தான் அவளிடத்தில் பொய் சொல்லி இருந்தான். அந்தப் பொய்களையே அவள் நம்பி வந்தாள்.

மேரி மட்டும்தான் இப்படி இருந்தாள் என்று சொல்ல முடியாது. டானியேல் எனும் பெயருள்ள ஒருவரை எனக்குத் தெரியும். அவர் ஒரு புத்திசாலி. ஊரிலேயே, அவர் தான் புத்திக்கூர்மையுள்ளவர் என்று அவருடைய குடும்பத்தினர் சொல்வதுண்டு. தேவன் அவருக்கு நல்ல புத்தியை தந்திருந்தார். ஆனால் சாத்தான் அதை பயன்படுத்தி அவரை சிறைப்படுத்தினான். தேவனை அறிந்துகொள்வதற்கு முன்பும் கூட, டானியேல் மற்றவர்களைப் பார்க்கிலும் மேலோங்கித்தான் இருந்தார். தன்னைக்குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி அவர் எண்ணினபடியால், பெருமையாகி, அவர் எளிதாக விழுந்துவிட ஏதுவாயிற்று. தன்னைவிட மந்தமாக இருந்த மற்றவர்களாலே அவர் குறைச்சொல்லப்பட்டு, நியாயந்தீர்க்கப்படும் அளவிற்கு தள்ளப்பட்டார்.

பெட்ரீஷியா என்ற பெண், ஏறத்தாழ மேரியை போலவே இருந்தாள். பெட்ரீஷியாவின் தந்தையோ, அவள் ஒன்றுக்கும் உதவாதவள், எதற்கும் மதிப்பில்லை, அவள் சந்திக்கும் முதல் நபரைத்தான் அவள் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பவர். அதைத்தான் அவளும் செய்தாள். அவளுடைய வாழ்க்கை பரிதாபமாக அமைந்தது. யாருக்குமே பிரயோஜனமில்லாதவள் என்று அவள் நினைக்க ஆரம்பித்தாள்.

மேரி, டானியேல், பெட்ரிஷியா ஆகிய மூவரும் வெவ்வேறு சிறைகளில் சிக்கி இருந்தனர். ஆனால், சாத்தான் சிறைச்சாலைத் தலைவனாக இருந்தான். பவுல் சொல்லியிருக்கும் “நம்முடைய போராயுதங்களை” குறித்து கற்கும் வரை மூவரும் பரிதாபமாக வாழ்ந்தனர். “கர்த்தருடைய வார்த்தை” என்னும் ஆயுதமே, அவர்களை விடுவித்தது. பிரசங்கங்கள், போதனைகள், புத்தகங்கள், ஒலிநாடாக்கள், கருத்தரங்குகள், சிறிய வேதப்பாட வகுப்புகள் மற்றும் தங்களுடைய தனிப்பட்ட தியானங்கள் மூலம், அவர்கள் வலுமையடைந்தனர். துதி மற்றும் ஜெபமாகிய ஆவிக்குரிய போராயுதங்களையுமாய் பயன்படுத்த கற்றுக்கொண்டனர். உண்மையாய் உள்ளத்தின் ஆழத்திலிருந்து தேவனைத் துதித்தால், மற்ற எந்த திட்டத்தைப் பார்க்கிலும், பிசாசை விரைவில் ஜெயிக்க முடியும் என்று அறிந்து கொண்டனர்.

ஒரே நாளிலேயே, அவ்வளவு பிரச்சனைகளையும் அவர்கள் ஜெயித்து விடவில்லை. மெதுவாக செயல்பட்டாலும், அது பிரயோஜனமுள்ளதாக அமைந்தது. “பிசாசு, அவனுடைய பொய்யினால் என்னை சிறைபிடிக்க அநேக ஆண்டுகள் ஆனது போல், தேவன் தம்முடைய நல்ல திட்டத்தை என்னில் நிறைவேற்ற, நான் ஏன் மேலும் பல ஆண்டுகள் தேவனுக்குக் கொடுக்கக்கூடாது,” என்று பெட்ரிஷயா பிறகு சொன்னாள். நம்முடைய வெற்றி, ஒரே முறை நடக்கும் ஒரு பெரிய நிகழ்ச்சி அல்ல - அது ஒரு தொடரும் அனுபவமாகும்.

“எந்த அளவுக்கு சாத்தான் என் மனதோடு விளையாடி இருக்கிறான் என்று நான் உணர்ந்தபோது, அந்த அளவுக்கு நான் அவனை எதிர்க்க முடிந்தது. கர்த்தருடைய வார்த்தையின் சத்தியம் என்னை விடுவித்தது,” என்று டானியேல் சொன்னார்.

பொல்லாங்கனுடைய வல்லமையை மேற்கொள்ள, துதி மற்றும் ஜெபமாகிய போராயுதங்களை தேவ ஜனங்கள் பயன்படுத்தவேண்டும். நம்முடைய மனதை தேவன் மீதும், அவருடைய வல்லமையின் மேலும், நம்முடைய வாழ்க்கையில் நடந்து வரும் நன்மைகள் மேலும் கவனம் செலுத்த; அது உதவுகிறது. தேவன் நமக்கு உதவ முடியும், அவர் உதவுவார் என்று நாம் விசுவாசிப்பதை இது நிரூபிக்கிறது.

நாம் தேவனிடத்தில் கொண்டுள்ள உறவையும், நாம் அவரையே சார்ந்திருப்பதையும்; ஒரு உண்மையான ஜெபம் வெளிப்படுத்துகிறது. நாம் அவருடைய பிள்ளைகள், அவர் நம்முடைய பிதா. நாம் ஜெபிக்கும் போது, தேவன் நமக்கு உதவி செய்யும்படி, நாம் வாசலை திறக்கிறோம். சாத்தானுடைய அரண்களிலிருந்து வெற்றி பெறவும், நம்முடைய மனது விடுதலை பெறவும், நாம் அவரைக் கேட்போம்.

அப்படிப்பட்ட ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிப்பார். நாம் அவரிடத்தில் கேட்பதற்கும் அதிகமாகவே, தேவன் பதில் கொடுப்பதில் இன்னும் அதிக ஆவலுள்ளவராய் இருக்கிறார். நாம் விசுவாசத்துடன் ஜெபிக்கும்போது, மிகப்பெரிய வல்லமை நமக்கு கிடைக்கக் கூடியதாய் இருக்கிறது என்று ஜெபத்தை இவ்விதமாக யோசித்துப் பாருங்கள்.

நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் என்று உண்மையாகவே புரிந்துகொள்ளும்போது, போராயுதங்களை பயன்படுத்தக் கூடிய மன தைரியம் நமக்குக் கிடைக்கும். ஆயுதங்கள் உள்ளன. இவைகளை எப்படி பயன்படுத்துவது என்ற அறிவுரைகளும், நாம் விட்டுக்கொடாமலிருக்க நமக்கு கொஞ்சம் உற்சாகமும் இருந்தாலே போதும். இயேசுவும் நம்மோடு எப்பொழுதும் இருப்பதாக வாக்களித்திருக்கிறார் (மத்.28:20). நம்முடைய ஆயுதங்கள் ஆவிக் குரியவைகளாய் இருப்பதால், நம்முடைய ஆயுதங்களைக்கொண்டு நம்மால் ஜெயிக்க முடியும். பிசாசானவனோ, மாம்சீக இச்சைகளைக் கொண்டு போர் செய்கிறான். ஆனாலும், தேவனுடைய வல்லமை நம்முடைய பக்கத்தில் இருப்பதால், நம்மால் ஜெயிக்க முடியும்.


விலையேறப்பெற்ற பரிசுத்த ஆவியானவரே, எங்களுடைய போராயுதங்கள் ஆவிக்குரியவைகளென்றும், பிசாசானவனின் ஒவ்வொரு தாக்குதலையும் நாங்கள் ஜெயிக்க முடியும் என்று புரிந்துகொள்ளக் கற்றுத்தாரும். கிறிஸ்துவின் நாமத்தில், ஜெபிக்கிறேன். ஆமென்.

Day 2Day 4

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More