1
மத்தேயு 27:46
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
பிற்பகல் மூன்று மணியளவில், இயேசு பலத்த குரலில், “ஏலீ, ஏலீ, லாமா சபக்தானி” என்று சத்தமாய்க் கதறினார். “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்பதே அதன் அர்த்தமாகும்.
Palyginti
Naršyti மத்தேயு 27:46
2
மத்தேயு 27:51-52
அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ் வரை இரண்டாகக் கிழிந்தது; பூமியதிர்ந்தது, கற்பாறைகள் பிளந்தன; கல்லறைகளும் நொருங்குண்டு திறந்தன; இறந்து போயிருந்த பல பரிசுத்த மக்களின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன.
Naršyti மத்தேயு 27:51-52
3
மத்தேயு 27:50
இயேசு திரும்பவும் பலத்த சத்தத்தோடு அழைத்து, தமது இறுதி மூச்சை விட்டார்.
Naršyti மத்தேயு 27:50
4
மத்தேயு 27:54
இயேசுவைக் காவல் காத்துக் கொண்டிருந்த நூற்றுக்குத் தளபதியும் அவனோடிருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த எல்லாவற்றையும் கண்டு பயமடைந்தார்கள். “நிச்சயமாக இவர் இறைவனின் மகனே!” என்று வியப்புடன் சொன்னார்கள்.
Naršyti மத்தேயு 27:54
5
மத்தேயு 27:45
நண்பகல் பன்னிரண்டு மணியிலிருந்து, பிற்பகல் மூன்று மணி வரை பூமி முழுவதையும் இருள் சூழ்ந்து கொண்டது.
Naršyti மத்தேயு 27:45
6
மத்தேயு 27:22-23
“அப்படியானால் கிறிஸ்து என அழைக்கப்படும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று பிலாத்து கேட்டான். அவர்கள் எல்லோரும், “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று பதிலளித்தார்கள். “ஏன்? அவன் என்ன குற்றம் செய்தான்?” என பிலாத்து கேட்டான். ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று இன்னும் அதிகமாகச் சத்தமிட்டார்கள்.
Naršyti மத்தேயு 27:22-23
Pradžia
Biblija
Planai
Vaizdo įrašai