1
மத்தேயு 10:16
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
“செம்மறியாடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புவது போல நான் உங்களை அனுப்புகிறேன். ஆகையால் பாம்புகளைப் போல விவேகம் உள்ளவர்களாயும், புறாக்களைப் போல கபடமற்றவர்களாயும் இருங்கள்.
Compare
Explore மத்தேயு 10:16
2
மத்தேயு 10:39
தனது வாழ்வைக் காத்துக்கொள்ள முயற்சிக்கிறவன், அதை இழந்து போவான். தன் வாழ்வை எனக்காக இழக்கிறவனோ, அதைக் காத்துக்கொள்வான்.
Explore மத்தேயு 10:39
3
மத்தேயு 10:28
உடலைக் கொன்றாலும் ஆத்துமாவைக் கொல்ல முடியாதவர்களுக்குப் பயப்பட வேண்டாம். உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள்.
Explore மத்தேயு 10:28
4
மத்தேயு 10:38
தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எவனும், எனக்குத் தகுதியுடையவன் அல்ல.
Explore மத்தேயு 10:38
5
மத்தேயு 10:32-33
“மனிதருக்கு முன்பாக என்னை யார் ஏற்றுக்கொள்கின்றார்களோ, பரலோகத்தில் இருக்கின்ற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை ஏற்றுக்கொள்வேன். மனிதருக்கு முன்பாக யார் என்னை மறுதலிக்கிறார்களோ, பரலோகத்திலிருக்கின்ற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை மறுதலிப்பேன்.
Explore மத்தேயு 10:32-33
6
மத்தேயு 10:8
நோயுற்றோரை குணமாக்குங்கள், இறந்தவர்களை எழுப்புங்கள், தொழுநோயாளர்களைச் சுத்தப்படுத்துங்கள், பேய்களை விரட்டுங்கள். நீங்கள் விலை கொடுத்து வாங்கவில்லை, எனவே விலையின்றிக் கொடுங்கள்.
Explore மத்தேயு 10:8
7
மத்தேயு 10:31
எனவே பயப்பட வேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும், அதிக பெறுமதியுடையவர்கள்.
Explore மத்தேயு 10:31
8
மத்தேயு 10:34
“பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என நீங்கள் நினைக்க வேண்டாம். நான் சமாதானத்தை அல்ல, முரண்பாட்டை உருவாக்கவே வந்தேன்.
Explore மத்தேயு 10:34
ಮುಖಪುಟ
ಬೈಬಲ್
ಯೋಜನೆಗಳು
ವೀಡಿಯೊಗಳು