நடுஜாமதுல பவுலுவு சீலாவு தேவரொத்ர வேண்டிகோண்டுவு, அவுருன புகழ்ந்து பாடிகோண்டுவு இத்துரு. ஜெயில்ல இருவுது மத்த கைதிகோளுவு அதுன கேளிகோண்டு இத்துரு. திடீரெந்து ஒந்து தொட்டு நெலநடுக்கா பந்துத்து. அதுனால ஆ ஜெயிலோட அஸ்திபாரகோளு எல்லா அசெஞ்சுத்து. ஆக ஜெயிலு கதவுகோளு எல்லா தெக்கோத்து. ஜெயில்ல ஒவ்வொந்தொப்புருனவு கட்டிமடகித சங்குலிகோளு எல்லா கழசி பித்துத்து.