1
மத்தேயு 9:37-38
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
அப்போது அவர் தமது சீடர்களிடம், “அறுவடை மிகுதியாய் இருக்கின்றது, ஆனால் வேலையாட்களோ குறைவாக இருக்கின்றார்கள். ஆகையால் அறுவடை செய்ய வேலையாட்களை அனுப்பும்படி, அறுவடையின் ஆண்டவரை வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார்.
Compare
Explore மத்தேயு 9:37-38
2
மத்தேயு 9:13
மேலும் அவர், “ ‘நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்ற இறைவாக்கின் கருத்து என்ன என்பதை, போய்க் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் நீதிமான்களையல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.
Explore மத்தேயு 9:13
3
மத்தேயு 9:36
அவர் திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டபோது, அவர்கள்மீது மனம் உருகினார். ஏனெனில் அவர்கள், மேய்ப்பன் இல்லாத செம்மறியாடுகளைப் போல் துன்புறுத்தப்பட்டவர்களாயும், உதவியற்றவர்களாயும் இருந்தார்கள்.
Explore மத்தேயு 9:36
4
மத்தேயு 9:12
இதைக் கேட்டபோது இயேசு, “குணநலத்துடன் இருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை” என்றார்.
Explore மத்தேயு 9:12
5
மத்தேயு 9:35
இயேசு எல்லாப் பட்டணங்களுக்கும் கிராமங்களுக்கும் பிரயாணம் செய்து, அங்கே யூதருடைய ஜெபஆலயங்களில் போதித்து, இறையரசின் நற்செய்தியை அறிவித்தார்; அத்துடன் எல்லாவிதமான நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கினார்.
Explore மத்தேயு 9:35
Home
Bible
Plans
Videos