சங்கீதம் 80:7-14
சங்கீதம் 80:7-14 TAOVBSI
சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக் கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர். அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது. அதின் நிழலால் மலைகளும், அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது. அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது. இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்? காட்டுப்பன்றி அதை உழுது போடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது. சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்.