ரோமர் 10:11-13
ரோமர் 10:11-13 TRV
“அவர்மீது விசுவாசம் வைக்கின்ற எவரும் வெட்கத்துக்குள்ளாவதில்லை” என வேதவசனம் சொல்கின்றது. ஏனெனில் யூதருக்கும் யூதரல்லாதவருக்கும் இடையில் வேறுபாடு இல்லை. ஒரே இறைவனே எல்லோருக்கும் இறைவனாய் இருக்கின்றபடியால் அவரை அழைக்கின்ற அனைவருக்கும் அவருடைய ஆசீர்வாதங்களைத் தாராளமாக வழங்குகிறார். அதனால், “கர்த்தரின் பெயரைச் சொல்லி அழைக்கின்ற யாவரும் மீட்கப்படுவார்கள்” என்று எழுதியிருக்கிறது.