வெளிப்படுத்தல் 9:20-21
வெளிப்படுத்தல் 9:20-21 TRV
இந்த வாதைகளினால் கொல்லப்படாமல் எஞ்சியிருந்த மற்றவர்களோ, தங்கள் செயல்களைவிட்டு இன்னும் மனந்திரும்பாமல் இருந்தார்கள். அவர்கள் பிசாசுகளையும், தங்கம், வெள்ளி, வெண்கலம், கல், மரம் என்பனவற்றால் செய்யப்பட்டதும், பார்க்கவோ கேட்கவோ நடக்கவோ முடியாததுமான விக்கிரகங்களையும் வணங்குவதை நிறுத்தவில்லை. அவர்கள் தங்களுடைய கொலைகளையோ, மந்திர வித்தைகளையோ, பாலியல் ஒழுக்கக்கேட்டையோ, களவுகளையோ, மற்ற எவற்றையும் விட்டு மனந்திரும்பவில்லை.