பிலேமோன் 1
1
1கிறிஸ்து இயேசுவுக்காக#1:1 கைதியாயிருக்கின்ற – கிரேக்க மொழியில் இயேசுவின் கைதி என்றுள்ளது. கைதியாயிருக்கின்ற பவுலும், நமது சகோதரனாகிய தீமோத்தேயுவும்,
எங்கள் அன்புக்குரியவனும் சக ஊழியனுமாகிய பிலேமோனுக்கும், 2எங்கள் சகோதரியாகிய அப்பியாளுக்கும், எங்கள் சக படை வீரனாகிய அர்க்கிப்புவுக்கும், உனது வீட்டில்#1:2 உனது வீட்டில் என்பது பிலேமோனின் வீட்டில் ஒன்றுகூடுகின்ற திருச்சபைக்கும் எழுதுகின்றதாவது:
3நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நன்றி செலுத்துதலும் மன்றாடலும்
4உன்னை என்னுடைய மன்றாடல்களில் நினைக்கும் போதெல்லாம் என் இறைவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். 5ஏனெனில், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் நீ வைத்திருக்கும் விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லோர் மீதும் நீ வைத்திருக்கும் அன்பையும் குறித்து நான் கேள்விப்படுகிறேன். 6நீங்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ளும் விசுவாசத்தினாலே, கிறிஸ்துவின் ஊடாக நாம் பெற்றிருக்கிற எல்லா நன்மைகளைக் குறித்தும் நீ முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் மன்றாடுகிறேன். 7சகோதரனே, பரிசுத்தவான்களின் இருதயங்களை நீ புத்துணர்வு அடையச் செய்திருக்கின்றாய். உன்னுடைய அந்த அன்பு எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது.
ஒநேசிமுக்கான பவுலின் வேண்டுகோள்
8எனவே நீ என்ன செய்ய வேண்டும் என்பதை கிறிஸ்துவுக்குள் எனக்குத் தரப்பட்டுள்ள அதிகாரத்துடன், எவ்வித தயக்கமும் இல்லாமல் நான் உனக்குக் கட்டளையிட முடியும். இருந்தாலும், 9அன்பின் அடிப்படையிலேயே நான் இந்த வேண்டுகோளை உன்னிடம் முன்வைக்க விரும்புகிறேன். எனவே வயதுசென்ற, அத்துடன் கிறிஸ்து இயேசுவின் பொருட்டு இப்போது கைதியாய் இருக்கின்ற பவுலாகிய நான், 10சிறையிலிருந்தபோது எனக்கு மகன் போல இருந்த ஒநேசிமுவுக்காக உன்னிடம் வேண்டிக்கொள்கிறேன். 11முன்பு அவன் உனக்குப் பயனற்றவனாய் இருந்தான். ஆனால் இப்போதோ உனக்கும் எனக்கும் பயனுள்ளவனாக இருக்கின்றான்.
12என் உயிரோடு ஒன்றித்துவிட்ட அவனை, உன்னிடம் திருப்பி அனுப்புகிறேன். 13நற்செய்திக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் எனக்கு உதவி செய்ய, உனக்குப் பதிலாக அவனை இங்கு என்னுடன் வைத்திருக்கவே விரும்பினேன். 14ஆனால் உன்னுடைய சம்மதம் இல்லாமல் நான் எதையும் செய்ய விரும்பவில்லை. ஏனெனில் நீ செய்கின்ற எந்த உதவியையும் வற்புறுத்தலின் பேரில் செய்யாது, அதை மனமுவந்து செய்யவேண்டுமென்று எண்ணினேன். 15சிறிது காலம் அவன் உன்னைவிட்டுப் பிரிந்திருந்தமை, ஒருவேளை திரும்பவும் அவன் உன்னுடன் வந்து நிரந்தரமாகச் சேர்ந்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவும் இருக்கலாம். 16அதாவது இனி அவன் ஒரு அடிமையாக அன்றி அடிமையைவிட மேலாக, அன்புக்குரிய ஒரு சகோதரனாக இருப்பான். அவன் எனக்கு மிகவும் அன்புக்குரியவன், ஆனால் சக மனிதன் என்ற வகையிலும் கிறிஸ்தவ#1:16 கிறிஸ்தவ – கிரேக்க மொழியில் கர்த்தரில் என்றுள்ளது. சகோதரன் என்ற வகையிலும், அவன் உனக்கு இன்னும் அதிக அன்புக்குரியவனாய் இருக்கின்றான்.
17ஆகவே நீ என்னை உன்னுடைய ஐக்கியத்தில் ஒருவனாக எண்ணிக்கொள்வாயானால், என்னை ஏற்றுக்கொள்வது போல அவனையும் ஏற்றுக்கொள். 18ஒருவேளை அவன் உனக்கு ஏதாவது தீமை செய்திருந்தாலோ, அல்லது உனக்குக் கடன்பட்டிருந்தாலோ, அதை என்னுடைய கணக்கில் வைத்துக்கொள். 19அதை உனக்குத் திருப்பிக் கொடுப்பேன் என்று பவுலாகிய நானே எனது சொந்தக் கைப்பட எழுதுகிறேன். இந்தச் சந்தர்ப்பத்தில், உன்னையே நீ எனக்குக் கொடுக்க வேண்டியவனாய் இருக்கின்றாய் என்பதை நான் உனக்குச் சொல்ல வேண்டியதில்லை. 20ஆம் சகோதரனே, கர்த்தருக்குள் உன்னாலே எனக்கு நன்மை கிடைக்கட்டும். கிறிஸ்துவுக்குள் உன் சகோதரனாகிய என் உள்ளத்தைப் புத்துயிர் அடையச் செய்வாயாக. 21என் சொல்லுக்குக் கீழ்ப்படிவாய் என்ற மனவுறுதியுடன் இதை உனக்கு எழுதுகிறேன். நான் கேட்டுக்கொள்வதற்கும் அதிகமாகச் செய்வாய் என்று எனக்குத் தெரியும்.
22மேலும் ஒரு வேண்டுகோள், எனக்கு ஒரு தங்கும் இடத்தை ஏற்பாடு செய். ஏனெனில் உங்களுடைய மன்றாடல்களின் விளைவாக நான் மீண்டும் உங்களிடம் வருவேன் என்று எதிர்பார்க்கின்றேன்.
23கிறிஸ்து இயேசுவுக்காக என் சக கைதியாய் இருக்கும் எப்பாப்பிராத்துவும் உனக்கு வாழ்த்துதலை அனுப்புகிறான்.
24அவ்விதமாகவே என் சக ஊழியர்களான மாற்கு, அரிஸ்தர்க்கு, தேமா, லூக்கா ஆகியோரும் வாழ்த்துதலை அனுப்புகிறார்கள்.
25ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருப்பதாக.
Currently Selected:
பிலேமோன் 1: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.